முஸ்லிம் போராளிகளின் வீரம் - ஆக்கிரமிப்பாளரின் ஹெலிகெப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது
ஆப்கானிஸ்தானின் தெற்குபகுதியில் நேட்டோ படையின் யூ.எச்.60 பிளாக் ஹவ்க் என்ற ஹெலிகாப்டர் பறந்து சென்று கொண்டிருந்தது. அதில் 7 அமெரிக்க ராணுவ வீரர்களும் 4 ஆப்கானிஸ்தான் வீரர்களும் இருந்தனர்.
இந்த நிலையில், அந்த விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதனால் அது முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் பயணம் செய்த 11 ராணுவ வீரர்கள் அனைவரும் பலியானார்கள். இவர்கள் தவிர அதில் இருந்த விமான ஊழியர்களும் இறந்தனர்.
இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாகவும், அது குறித்து விசாரணை நடப்பதாகவும் நேட்டோவின் அமெரிக்க சர்வதேச பாதுகாப்பு மையம் செய்தி தொடர்பாளர் ஜமீ கிரேபியல் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த ஹெலிகாப்டரை தலிபான்கள் சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் குவாரி யூசுப் அகமது கூறும்போது,
நேட்டோ ஹெலிகாப்டரை கந்தகார் மாவட்டத்தில் ஷாவாலிகாட் பகுதியில் செனார்டோ என்ற இடத்தில் தலிபான்கள் சுட்டு வீழ்த்தினர். ராக்கெட் குண்டு வீசி ஹெலிகாப்டரை தாக்கி அழித்தோம். அதில் இருந்த ஊழியர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் என கூறியுள்ளார்.

Post a Comment