இது தவறா..? மறதியா..?? (மாணவர் + பெற்றோர் கவனத்திற்கு)
பரீட்சை நேரசூசியை உரிய முறையில் கவனிக்காத இரு மாணவர்கள் ஒரு பாடத்தின் முதல்பகுதி பரீட்சைக்குத் தோற்ற முடியாமல் போனது. நாடு முழுவதும் நடைபெற்றுவரும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இருவருமே இவ்வறான பாதிப்புக்கு ஆளானவர்கள்.
பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை எடுக்கக்கூடியவர்கள் எனக் கருதப்பட்ட மாணவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது என்று குறித்து கல்விச் சமூகத்தினர் கவலை கொண்டுள்ளனர்.
பரீட்சைக்கான பாடம் நேரசூசியில் காலையில் நடைபெறுமென குறிப்பிட்டிருந்த போதிலும் அது பிற்பகலில் நடைபெறுமென இந்த மாணவர்கள் தவறுதலாக நினைத்ததால் பரீட்சைக்குத் தோற்ற முடியவில்லை.
பரீட்சை முடிந்ததும் சக மாணவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஏன் வரவில்லை எனக்கேட்ட போதுதான் பரீட்சை முடிந்தது அந்த மாணவர்களுக்குத் தெரியவந்தது.
பிள்ளைகள் முழுநேரக் கல்வியில் ஈடுபட்டிருப்பதால் பெற்றோர் நேரசூசியை அவதானித்திருந்தால் இந்தத் தவறு இடம் பெற்றிருக்காது எனவும் இந்தத் தவறு இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க பெற்றோர் அவதானமாக இருக்க இதை உதாரணமாகச் சொல்ல வேண்டுமெனவும் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் யாழ்.மாவட்டப் பாடசாலை ஒன்றின் மாணவர்களே பாதிக்கப்பட்டனர்.

Post a Comment