பிரான்சில் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம்
பிரான்சின் வடக்கு பகுதியில் அமியென்ஸ் நகரம் உள்ளது. இங்கு அல்ஜீரியா, துனிசியா, மொரங்கோ, கபோனி, மாலத்தீவு போன்ற வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளனர். இங்கு முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது, போலீசாருக்கும், இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இது கலவரமாக மாறியது.
இதையொட்டி போலீசார் மீது கல்வீச்சு நடந்தது. கையெறி குண்டுகள் வீசப்பட்டன. தீவைப்பு சம்பவங்களும் நடந்தன. இதில் 16 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். பல கார்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
இதைதொடர்ந்து கலவரம் வேறு நகரங்களிலும் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அதிபர் பிரான்கோசிஸ் ஹாலண்டே உறுதி அளித்துள்ளார். பிரான்சில் முக்கிய நகரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


வாகன விபத்தில் மரணித்த ஆபிரிக்க வம்சாவளி முஸ்லிம் இளைஞர் ஒருவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களுடன், ஒரு காவல் சாவடியில் இருந்த போலீசார் கடுமையாக நடந்துகொண்டதைத் தொடர்ந்தே வன்முறைகள் வெடித்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ReplyDelete