ஆப்கானிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்கள் - 20 பேர் மரணம், 48 பேர் காயம்
ஆப்கானிஸ்தான் நாட்டில் 3 மனித வெடிகுண்டு தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர், 48 பேர் காயமடைந்தனர். நிம்ரோஸ் மாகாணத்தின் தலைநகரான ஜரன்ஞ் நகரில் நேற்று பிற்பகலில் தற்கொலைப் படையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
முதலில் ஒருவர் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார் அங்கு இருந்த மேலும் 2 தற்கொலைப் படையினரை சுட்டுக் கொன்றனர். அப்போது தவறுதலாக அவர்களிடமிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது.
இதில் 15க்கும் மேற்பட்டோர் பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர் என்று நிம்ரோஸ் மாகாண கவர்னர் அப்துல் கரீம் பராவி கூறினார். நிம்ரோஸ் மாகாணம் அமைதியான பகுதியாகவே இருந்தது. ஆனால், சமீபகாலமாக இங்கும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இப்பகுதியில் தீவிரவாதிகளாக சந்தேகிக்கப்பட்டவர்களை அதிகாரிகள் பிடித்த மறுதினமே இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

Post a Comment