Header Ads



மஹிந்த ராஜபக்ஸவுக்கு மக்காவில் துஆ பிரார்த்தனை


இலங்கைக்கும், இலங்கை மக்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷக்கும், அரசாங்கத்திற்கும் நல்லாசி வேண்டி புனித லைலதுல் கத்ரை முன்னிட்டு மக்கா நகரில் இன்று செவ்வாய்கிழமை விசேட துஆப் பிரார்த்தனையொன்றை நடாத்தவிருப்பதாக ஜனாதிபதியின் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளர் கலாநிதி ஹஸன் மெளலானா தெரிவித்தார்.

நபவியத்துல் காதிரிய்யா தரீக்காவின் விசேட பிரதிநிதி ஹஸன் உட்பட உம்ராவை நிறைவேற்ற இலங் கையிலிருந்து மக்காவுக்கு வருகை தந்துள்ள சகல முஸ்லிம்களும் இந்த விசேட பிரார்த்தனையில் கலந்து கொள்வர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

“சுமார் முப்பது வருடங்களுக்குப் பின்னர் நாட்டுக்குக் கிடைக்கப்பெற்றிருக்கும் அமைதி, சமாதானம் நீடித்து நிலைக்க வேண்டும் என்றும் முஸ்லிம்களுக்கு எதிராக உள்நாட்டிலும், உலகளாவிய ரீதியிலும் மேற்கொள்ளப்படுகின்ற சதிகளும், சூழ்ச்சிகளும் செயலற்றுப் போக வேண்டும் என்றும் இப்பிரார்த்தனையின் போது பிரார்த்திக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆகவே இந்நன்நாளில் இலங்கை வாழ் முஸ்லிம்களும் நாட்டின் சுபீட்சத்திற்காகவும், முஸ்லிம்களுக்கெதிரான சதிகள் சூழ்ச்சிகள் தோல்வியுறவும் விசேட துஆப் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும் என்று அவர் மக்காவிலிருந்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

5 comments:

  1. INTHE KUMBELTHAN ILENGAIYIL NO 1 SIRKKALERHEL... IVERHEL COLOMBO DEMETEGAHA PALLIYIL SAIYUM PITHNAKKEL AYIREM AYIREM... INTHE KAFIRUKKAHE IPPOTHU MAKKAVARAI SENTRU VITTARHEL DUA SAIYE... ANAL MIYANMAR, ASAM, PALASTINE, CHINA, SIRIYA MATRUM IRAN MUSLIM SAHODERERHELUKKAHE ILENGEYILAVEDU ORU PAHIRANGE DUA PIRARTHENAYIL PANGUHOLLE INNUM THOANTRE VILLAI INTHE MADAIYERHELUKKU,,, ALLAH MAY GIVE THE HIDAYATH TO ALL OF THEM,,, AAMEEN

    ReplyDelete
  2. ejamaan poadum elumbutthundukkai naakkai neettum theru naaihal poanru, janaathifathi poadum pathavihalai thakka waippathatkai maarkatthai koooda nayyandi pannum throahihalil oruwarea indha moulanawum. kallai wanangum arasiyal waathikkum kabrai wanangum dhewatagaha kumbalukkum poruttham romba kacchithama ulladhu...oru mushrikkai muslimgalin madha wivahara aaloasahara niyamitthullamai em samooham innum jaahiliyyatthil irunthu meelawillai enbathaiyye kaattuhirathu....silaiwanangikku makkawil waitthu dhuah sayyum intha kaburu wanangihal naalai muslimgalai karuwarukkum koadaarikkambuhalai maaruwar enbathai nam samooham enru thaan unarumoa???

    ReplyDelete
  3. தரீக்கவே வழிகேடு....

    அதில் இது வேறு.....

    ReplyDelete
  4. கபுறு வணங்கியே உன் பிராத்தனை எப்படி கபூல் ஆகும்,பள்ளிவாசல் அகற்றும் நடவடிக்கைக்கு ஒத்தாசையும்,புனித பூமி நடவடிக்கைக்கு அவசர உத்தரவும் போட்டுள்ள மகிந்தவுக்கு அல்லாவின் வீட்டில் பிராத்தனையா?இலங்கையில் பள்ளி இடிப்பவனுக்கு ஒரு காபிருக்கு பிராத்தனை
    மக்காவில் பிராத்தனையா, கபுறு வணங்கியே உன் பிராத்தனை எப்படி கபூல் ஆகும்.

    ReplyDelete
  5. யார் இந்த ஹஸன் மௌலானா?

    ReplyDelete

Powered by Blogger.