போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ள சிரியா போராளிகள் (வீடியோ)
சிரியாவில் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி விலகக்கோரி கிளர்ச்சியாளர்கள் ஓராண்டுக்கும் மேலாக போராடி வருகின்றனர். போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 20 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வற்புறுத்தியும் பஷர் அல் ஆசாத் பதவி விலக மறுத்து வருகிறார். ரஷ்யா, சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் சிரியாவுக்கு ஆதரவளிக்கின்றன. சிரியா மீது பொருளாதார தடை விதிக்க சீனாவும், ரஷ்யாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதையடுத்து கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத உதவி செய்து வருகிறது அமெரிக்கா. இதன் காரணமாக கிளர்ச்சியாளர்கள் நவீன ஆயுதங்களை பயன்படுத்தி அரசு படைகளுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். அலெப்போ நகரை கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஆனால், இந்த நகரை மீட்டு விட்டதாக அரசு தெரிவிக்கிறது. இந்நிலையில் டீர் அல் சூர் மாகாணத்தில் போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாகவும், அந்த விமானத்தின் பைலட்டை கைது செய்துள்ளதாகவும் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கிளர்ச்சியாளர்களின் ஆதரவு பெற்ற சிரிய தேசிய கவுன்சில் தலைவர் அப்துல் பசத் சிட்டா குறிப்பிடுகையில், " நாங்கள் போரிடும் பகுதியில் விமானம் பறக்க தடை விதித்துள்ளோம். எனவே, அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ராணுவ விமானங்கள் பறப்பதை கண்காணிக்க வேண்டும்' என்றார்.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
ReplyDeleteஷீயா கொடுங்கோலன் அஸாத்தின் ஆட்சி விரைவில் ஒழிந்து, சிரியாவில் தூய இஸ்லாமிய ஆட்சி மலர அல்லாஹ்வைப் பிராத்திப்போம். சிரியா மக்களின் துன்பங்களுக்கு அல்லாஹ் விரைவில் விடிவைக் கொடுப்பானாக.
idatku yen amerikka udavi purigiradu..
ReplyDelete