Header Ads



மரமாக இல்லாத மரக் கட்சித் தலைவர்...!


அபூஹிமா


மனிதன் மனிதன்தான் , அவன் எவ்வளவு புனிதனாக இருந்தாலும் சாதாரண மனிதப் பலவீனங்கள் எல்லோருக்கும் இருப்பது இயற்கையே. இந்தப் பலவீனங்களிலேயே மிகப் பெரும் பவீனந்தான் கோபம், ஆத்திரம் என்பன. உயிரினங்களிலேயே கோபம் என்பதை வெளிக்காட்டாத ஒரே இனம் தாவர இனமாகத்தான் இருக்கும். ஆனால் இன்றைய விஞ்ஞானம் அதனையும் இல்லை என்றே சொல்லும்.

உணர்வுகளே அற்ற ஒருவனை குறிக்க "அவனொரு மரம்" என்கிற வார்த்தைப் பிரயோகம் கையாளப்படுகிறது. இதனை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தான் ஒரு மரம்  இல்லை என்பதை மீண்டும் ஒரு தடவை நிரூபித்திருக்கிறார் என்பதனால்தான்.

நமது சமுகம் மூன்று விதமான அரசியல் தலைமைகளை கொண்டுள்ளது .    (மார்க்கத் தலைமைகளிலும் இந்த மூன்று விதங்கள் உண்டு)

முதலாவது வகை - சமூகம் பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் சீறி எழுவது.

இரண்டாவது வகை - சமூகத்திற்கு என்ன நேர்ந்தாலும் தான் சேர்ந்திருக்கும் அரசுக்கு காவடி தூக்கும் வழக்கில் வளர்ந்தது.

மூன்றாவது வகை - பற்றி எரிந்தாலும் பரவாயில்லை என்று மவுனமாக இருக்கும் (மரங்கள்) ஜடங்கள்.

அண்மையில் தொடங்கி நடந்துவரும் பள்ளிவாயல்கள் சார்ந்த பிரச்சினையில் இந்த மூன்று விதமான அரசியல் பிரகிருதிகளையும்  நாம் தெளிவாகக் கண்டுள்ளோம் .  அவர்கள் யார் யார் என்பதை நான் இங்கு பட்டியல் போடத்தேவையே இல்லை. சமூகம் இவர்களை நன்றாகவே எடை போட்டு வைத்திருக்கிறது.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் "முதலாவது வகை" என்பது என் கணிப்பீடு. பெரும்பாலானவர்கள் இதில் முரண்பட மாட்டார்கள் என்று எண்ணுகிறேன்.
மாவனல்லை இனக்கலவரம்  தொடங்கி இன்றைய தம்புள்ளை... வரை உரத்துப் பேசிய ஒரே ஒரு தலைமை என்றால் அது ஹகீம் என்பதில் மாற்றுக் கருத்திருக்காது. இன்னும் ஓரிரு அரசியல் வாதிகள் இது விடயத்தில் சமூகப் பிரக்ஞயுடன் கதைத்திருக்கிறார்கள்தான். ஆனால் எவரும் ஹகீம் போல துணிவோடு பேசவில்லை.

மாவனல்லை விவகாரத்தில் ஹகீம் எடுத்த துணிவான முடிவு ஆட்சியையே மாற்றி சரித்திரம் படைத்தது நம் எல்லோருக்கும் தெரியும்.  (வாசகர்கள் என்னை, நான் என்னமோ "ஹகீம் புராணம்" எழுதுவதாக தப்பாக எண்ணி விடாதீர்கள். உண்மைகளை உண்மைகளாக எழுதும் போது இது தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது. அதற்காக என்னை மன்னியுங்கள்)

சரி... பழைய புராணத்தை விட்டு விட்டு இப்போது கதைக்கு வருகிறேன்..

"சீறிப் பாய்ந்த ஹகீம் பெட்டிப் பாம்பாய் அடங்கிவிட்டார்" என்று சில அரசியல் வியாபாரிகள் நேற்று முதல் அறிக்கை விட ஆரம்பித்துள்ளார்கள். ஆனாலும் மகிந்தையின் மகுடிக்கு ஆடாத பாம்பாக இன்னும் ஹகீம் இருக்கிறார் என்பதை இன்று சக்தி, சிரச இரவுச் செய்திகளில் காணக் கிடைத்தபோது சந்தோசமாக இருந்தது. அந்த உணர்வின் வெளிப்பாடாகத்தான் இந்த இரவில் உட்கார்ந்து இதனை தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன்.

சாய்ந்தமருது கூட்டத்தில் ஹகீம் "காவியுடை பயங்கரவாதத்தை ஜனாதிபதி கட்டுப்படுத்தியாக வேண்டும்" என்று சொன்னதை முதலில் பெரிது படுத்தியவர்கள் நமது பைசர் முஸ்தபாவும், அஸ்வருந்தான். முதலாமவரின் பத்திரிகை அறிக்கையும், இரண்டாமவரின் பாராளுமன்ற உரையும் ஹகீம் சொன்னதன் உண்மையான அர்த்தத்தை பூதாகரமாக மாற்றிவிட்டன.

சும்மா கிடந்த சங்கை இவர்கள் இருவரும் ஊதிக் கிளப்பிய சப்தத்தில் தூங்கிக்கொண்டிருந்த "ஹெலஉறுமய" விழித்துக் கொண்டது. கர்ச்சிக்கக்கத் தயாரான சிங்கத்தை ஹகீம் மிகவும் சாதுரியமாக தடவிக்கொடுத்து சமாளித்தது அவரின் அரசியல் முதிர்வையும், அஷ்ரபிடம் கற்ற சாணக்கியத்தையும் தெளிவாக வெளிப்படுத்துகின்றது.
 
தம்புள்ளை... தெஹிவளை... குருனாகல்... ஜபல் மலை... என்கிற தொடர் கதையால் உண்டாகும் விளைவுகளை முழு முஸ்லிம் சமூகமுமே விமர்சித்துக்கொண்டும், பீதியோடு பார்த்துக் கொண்டும் இருக்கும் நிலையில், நேரடியாகவே இந்த சம்பவங்கள் அனைத்திலும் சம்பந்தப் பட்டிருக்கும் துறவிகளை ஹகீம் பயங்கரவாதிகள் என்று சொன்னதை நம்மட நம்ரூதுகள் பிழை கண்டது அவர்களின் சொந்த அரசியல் நலனுக்காகத்தான்.

ஹகீம் இனவாதம் பேசி, மக்களை பிழையாக வழி நடாத்தி வாக்குவேட்டை ஆடுகிறார் என்கிற இவர்கள், இவர்களின் எஜமானர்களுக்கு பெற்றுக் கொடுக்க இருக்கிற  கொஞ்ச நஞ்ச முஸ்லிம் வாக்குகளும் கை நழுவுகிறதே என்கிற, வெறுங்கையால் வேட்டை ஆட நேருகிற அவலத்தை மறைப்பதற்கே இப்படி துள்ளினார்கள் என்பதுதான் உண்மை.

ஆடையே இல்லாத அவர்களின் கோவணம் கூட கழன்று விழும்போது அலறித் துடிப்பது ஒரு சாதாரண நிகழ்வுதான்.

ஹெல உறுமய ஒன்றும் முட்டாள்களின் கூட்டமல்ல. ஹகீம் ஏன் சொன்னார், எதற்குச் சொன்னார், எவர்களை சுட்டிச் சொன்னார் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியும். அவர்களும் அம்பாறை தேர்தல் மாவட்டத்துள் வருகிற "தெஹியத்தகண்டிய" என்கிற சிங்கள பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வேரூன்றுவதை தடுக்க இதனை ஆயுதமாக்கினார்கள் என்கிற ரகசியம் நம்முள் பலருக்குத் தெரியாது.

இதுவரை நான் குறிப்பிடாத இன்னும் இருவரும் இந்த நாடகத்தில் துணை நடிகர்களாக இருக்கிறார்கள். ஒருவர் அரசியல் ஜோக்கர் முபாரக் மவுலவி, மற்றவர் உண்மையாகவே சமூகப் பற்றுடன் இயங்கும் முஜிபுர்ரஹ்மான் ஆகியோர்.

முஸ்லிம் காங்கிரசின் குட்டையில் மீன் பிடிக்க இவர்கள் கொண்டுபோன தூண்டிலில் உள்ள புழுவையும் ஹகீம் கைப்பற்றுவதை கண்டு அலறிய அலறலே அது அல்லாமல் வேறல்ல. (ஹக்கீமை விடவும் காரசாரமாக கதைக்கிற முஜிபுர் ரஹ்மான் ஹக்கீமை பிழை காண்பதில் எந்த நியாயத்தையும் காண முடியாதுள்ளது)

அது சரியப்பா... சீறிப்பாய்ந்த ஹகீம் ஏன் பெட்டிப்பாம்பானார்..? என்று நீங்கள் கேட்க நினைப்பது புரிகிறது.

நான் ஏற்கனவே குறிப்பிட்டவர்கள் கிளப்பிய கதறலில் விழித்துக்கொண்ட ஹெல உறுமய தனது அஜென்டாவை பயன்படுத்த இதனை சரியான சந்தர்ப்பமாக்கிக் கொண்டு ஒரு கலவரத்தை உண்டாக்கிவிடக்கூடாது. அதற்கு இடமளித்த பழியை சுமந்து வாழ் நாள் முழுவதும் அழுவது மட்டுமன்றி, வரலாற்றிலும் தான் ஒரு வடுவாக இருந்து விடக் கூடாது என்கிற மிகவும் புத்தி சாதுர்யமான முடிவின் காரணத்தால்தான், சும்மா இழுத்தடித்து , வீண் வம்பு வளர இடங்கொடாமல், தன்னுடைய சுய கௌவுரவத்தை பெரிதாக நினையாது, இந்த "மன்னிப்பு கேட்கிறேன்" என்கிற மிகப் பெரும் ஞானிகளின் மனப்பக்குவத்தை ஹகீம் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்த மிகப்பெரிய உண்மையை " சின்னத் தனமாக "விமர்சிக்கிற அறிவிலிகளை நாம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

"மன்னிப்புக் கேட்கிறேன்" என்கிற அவரின் அறிக்கை ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு தமிழ் பத்திரிகைகளும் அதனை அவர்களின் பார்வையில் மொழிபெயர்ர்த்து வெளியிட்டுள்ளன என்பதும் இங்கு கவனிக்கவேண்டிய ஒன்றாகும். அதன் அசல் ஆங்கில அறிக்கையில் அவர் மறைமுகமாக "சில பௌத்த குருமார்கள் செய்கிற இந்த பயங்கர வாதத்திற்காக நான் ஒட்டுமொத்த துறவிகளையும் குற்றம் சாட்டி விட்டதற்காக வருந்துகிறேன்" என்பதனையே சூசகமாக சொல்லி இருக்கிறார். அது உண்மைதானே..!

கடைசியாக நான் சொல்ல விரும்புவது, ஹக்கீமின் அரசியல் விரோதிகள் இன்று அவரை விமர்சிக்கும் அதே வார்த்தைகளைத்தான்.

ஆம்.. ஹகீம் பெட்டிப் பாம்புதான், அது சீறிப் பாயும் என்கிற நம்பிக்கையை நேற்றும் இன்றும் நடந்த மக்கள் சந்திப்புகளில் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

முஸ்லிம் காங்கிரசில் பெட்டிப் பாம்புகளாவது இருக்கின்றன. அரசில் இணைந்து கேட்கிற கட்சிகளிலும், ஆளும் கட்சியிலும் "பல்லுப் பிடுங்கின பாம்புகள் " அல்லவா இருக்கின்றன. 

ஓட்டுப் போடுறது...!

பெட்டிப் பாம்புகளுக்கா...?
பல்லுப் பிடுங்கின பாம்புகளுக்கா...??

என்பதை முடிவு செய்யுங்கள்..!! 
     

16 comments:

  1. அபூஹிமா பாடியிருப்பது ரவூப் ஹக்கீம் புராணம்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. கிழக்கு மாகாணத்தில் தேர்தல் வரும்வரை காத்திருக்காமல், தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப் பட்ட சந்தர்ப்பத்திலேயே இப்படி ஒரு சீறிப் பாய்தலை பாராளுமன்றத்திலேயே நிகழ்த்தி இருப்பாரேயானால், "அப்பாவி முஸ்லிம்களை உசுப்பேற்றி, வாக்கு வாங்கத்தான் இப்படி நாடகம் போடுகின்றார்" என்ற குற்றச்சாட்டு வந்திருக்காதல்லவா?

    ReplyDelete
  2. ....சிறந்த ஆய்வு .....பாராட்டுக்கள்.....அவரின் குறைகளை மட்டுமே தேடுறோமே...அவரின் நிறைவுகளையும் தேடி பார்போம்...கட்டுரையின் கடைசி வரிகள் அருமை அருமை அருமை......நன்றி mrஅபூஹிமா....

    ReplyDelete
  3. அபு ஹிமா
    ஹகீம் சொன்னதை நான் வேறு விதமாகப் பார்க்கின்றேன்.
    ”இலங்கையில் சிறுபான்மையினர் மீதான பௌத்த தீவிரவாதிகளின் அடாவடித் தனங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. அதனை அரசும் கண்டும்காணாமல் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கின்றது.” தம்புள்ளைப் பள்ளியில் துவங்கி திருக்கோவில் வினாயகர் கோயில் சிலைக் கபளீகரம் வரை இதைத்தானே நாம் காண்கின்றோம். இந்தச் செய்தியை உரத்துச் சொல்லியாகிவிட்டது. நாட்டிலுள்ள அனைத்து நடுநிலை சிந்தனைகளுக்கும் சாதி மத பாடுபாடின்றி செய்தியைக் கொண்டு சென்றாகிவிட்டது. அவர்களது சாடல்களுக்கு அத்துமீறிகள் இலக்காகத் தொடங்கிவிட்டனர். அதன் விளைவுதான் பௌத்த குருமார் பலரின் அறிக்கைகளும், அதிகரித்த படையினர் பொலிசாரின் இப்தார் நிகழ்வுகளும்.
    இலக்கை எட்டியாகிவிட்டது. இனியென்ன கடுப்பெடுத்து காட்டிக் கொடுக்கக் காத்திருக்கும் நமது எட்டப்பன் கூட்டத்துக்கும், ஆர்ப்பரித்து எழுவார்கள் என எதிர்பார்த்த துரைமாருக்கும் சேர்த்தாற்போல ஒரு சொல். ”மன்னிப்பு” அது ஒரு சாணக்கியமான வார்த்தை. அதனைச் சொல்லாததனால்தானே வடக்கிலிருந்து நமது சகோதரர்களை வெளியேற்றிய புலிகளும் அவர்களது ஆதரவாளர்களும் இன்றுவரை சங்கடத்தில் மாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அதே சொல் சொல்லப்பட்டுவிட்டதால் நமது மனக்கோட்டை நொறுங்கி வீழ்வதனைக் காணச் சகிக்கவொண்ணாமல் எட்டப்பன் கூட்டம் கூப்பாடு போடுகின்றது.
    உண்மையில் குறவனின் மகுடிக்கு ஆடுகின்றவர்கள் அன்றோ பெட்டிப் பாம்புகள். அதனை அவர்கள் அறிந்துகொள்ள மாட்டார்கள்.

    ReplyDelete
  4. உங்கள் மர தலைவர் மரமாக இருப்பதில்லை தென் இலங்கையில் முஸ்லிம்களுக்கு அநியாயம் நிகழும் போது மாத்திரமே ஆனால் அதே மரதலைவர் புலிகளோடு புரியாணி திண்டு திரத்தி அடிக்கப்பட்ட வடமாகாண முஸ்லிம்களை இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் என ஒரே வார்தையில் அவர்களின் வரலாற்றை ஒரு புரியாணி பார்சலுக்காய் விற்று விட்டு வந்ததை மறக்க முடியுமா? யுத்த நிறுத்த காலத்தில் அவர் ஆட்சிக்கி கொண்டு வந்த அதே ஐகியதேசிய கட்சி அரசு ஆட்சியில் இருக்கையில் வாழைசேனை பஸிசபுலிகளால் பற்றி எரியவைக்கபட்ட வேளை ஆட்சி செய்த அரசு சமாதான ஒப்பந்ததை காட்டி எதுவும் செய்யாது கைகொட்டி பார்து நின்ற வேளை அவரும் மரமாகத்தானே இருந்தார்?

    இரண்டாயிரம் இராணுவத்தின் முன்னும், நீதிபதி அரச அதிபர் என உயர் அரச அதிகாரிகள் போலிஸ் அதிகாரிகள் முன்னும் திருமணவீட்டில் சமையல் செய்ய சென்ற அந்த முஸ்லிம் சகோதரர்கள் கொலை செய்யபட்டு அவர்களின் உடல் கண்டுபிடிக்கபட்டு ஒப்படைக்க ஏட்பாடு நடந்த வேளை அவ்வளவு இராணுவத்தின் முன்னும் நீதிபதி முன்னும் அந்த உடல்கள் பெற்றோல் ஊற்றி எரிக்கபட்டதே அபோது இந்த நாட்டின் அரசோடு இணைந்து அவர் மரமாகதானே இருந்தார்?

    தம்புள்ளையிலும் தெஹிவளையிலும் மஸ்ஜிதுகளுண்டான இக்கடை ஆக்ரோசதுடன் குரல் கொடுப்பதால் தன்னை மரமாக இல்லாதவர் என நிரூபிக்கும் அவர் கல்லியன் காட்டில் மஸ்ஜித் உடைதெறியபட்டு பிரம்ம குமார இராஜயோக மண்டபம் கட்டபட்டிருப்பதை பார்துகொண்டும் நொச்சிமுனையில் மஸ்ஜித் உடைதெறியபட்டு தரிசனம் பாடசாலை கட்டபட்டிருப்பதை பார்துகொண்டும் ஒரு வார்தையாவது எதிர்து பேசாது மரமாகதானே இருக்கிறார் இதோ தம்புள்ளையைவிட கொடுமை உன்னிசையில் இரவுதான் நடந்துள்ளது மஸ்ஜித் தீட்டு எரித்து நாசமாக்கபட்டுள்ளது எரிதோர் யாரும் அல்ல மன்னாரை போன்றே மீண்டும் முஸ்லிம்கள் தங்கள் சொந்த இடங்களில் மீள் குடிஏறுவதை தடுத்துகொண்டிருக்கும் அதே புலி ஆதரவு சக்திகள்தான் இதனை பார்துக்கொண்டும் அவர் மரமாக்தான் நிட்பாரா???


    அப்படி அவர் ஒந்த அநியாயதையும் தட்டி கேட்காது மரமாக இருந்தால் அவர் வடகிழக்கு மக்களின் அரசியல் அதிகாரதை பெறுவதட்கு இன்னும் தகுதியானவர்தானா என மக்கள் நிச்சயம் தீர்மானிப்பர்

    ReplyDelete
  5. well said. this probloem was was under fire after faizer musthafa, aswar and mubaarack moulavis media release. evarhal moovarume nam pachonthihal, mahinda vin elumbu thudukkai samoohathaye kaatikoduppavanhal.

    ReplyDelete
  6. Are you Hasan Ali or Nisam Kariyappar? I think you are surely one of them. If you are not one of them, you will definitely be a person who loves Rauff Hakeem more than they (Hasan Ali and Karyappar)do.

    My suggestion to you "Jaffna Muslim" not to publish these partial reports but let these people give their political views in the form of their comments below the reports.

    ReplyDelete
  7. இதைதான் குப்புற விழுந்தும் மண் ஒட்டவில்லை என்பது. முட்டாள்தனமாக உளறி விட்டு மன்னிப்பு கேட்பதைவிட சும்மா இருக்கும் அதவுல்லா பரவ இல்ல

    ReplyDelete
  8. Wonderful!!!!
    Where are you from? I think you don't know any thing about Hakeem!!!


    Basha!!

    ReplyDelete
  9. மாஷா அல்லாஹ்...

    இதை சொன்னால் ஏற்றுக்கொள்ளும் மனதும் இல்லாதவர்கள்தான் இங்கு அதிகம் விமர்சனம் செய்கின்றார்கள் அபு ஹிமா....
    எவ்வளவு தெளிவாக சொன்னாலும் மடையர்கள் கூட்டத்திற்கு புரியாது.
    நேர்மையாகவும் பார்வைக்கு மிகவும் நன்றி...
    அபு ஹிமா அவர்களே..!

    ReplyDelete
  10. அருமையான அவசியமான விமர்சனம் உண்மை உலகறியும் இருந்தும் விட்டுக்கொடுக்கின்ற தன்மையை வளர்த்து எம்மை நிலைத்திடச்செய்தலில் பல வெற்றியிருக்கிறது எம்மவர்களின் இந்த கூட்டிக்கொடுக்கும் அரசியல் மாறாதவரை இந்த நாட்டில் விடிவு கிடைக்காது

    ReplyDelete
  11. தலைமைத்துவ சாணக்கியம் உங்களுக்கு தெரிகிறது...
    அதை விட சமூகத்துக்கு அவர் செய்யத்தவறிய கடமைகளும், வாக்குருதிகளுமே
    இன்னும் நிழலாடுகின்றன!
    பல் பிடுங்கின பாம்பும் வேண்டாம்.
    பெட்டிபாம்பும் வேண்டாம்.
    மனிதம் மறவா மனிதர் வேண்டும்!!
    (பெரும்தலைவரின் மறைவிற்கு பின்)
    அவரை தோளில் சுமந்து (சாய்ந்தமருது ஜும்மாஹ் பள்ளிக்கு முன்பாக நடந்த) தேர்தல் பிரசார கூட்டத்தில் மேடை ஏற்றியபோது
    ஆனந்த கண்ணீர் வடித்த ஒவ்வொரு தொண்டனும் இவரிடம் எதிர்பார்த்தது
    வெட்டி வாய்ச்சொல் வீரராக இவர் இருப்பார் என்று அல்ல...
    தலைமைத்துவ சாணக்கியத்தை கற்றுத்தேர்ந்தவர்களுக்கு மட்டும் காட்ட அல்ல...
    சமூகத்துக்கான பிரச்சினை, பாதுகாப்பு என வரும்போது அடிமட்டத்திட்கும் விளங்கும் வண்ணம் பங்கேற்புடன் எங்களில் ஒருவராக செயற்பட வேண்டும் என்றுதான்!!!!

    ReplyDelete
  12. ஹகீம் சாணக்கியம் மிகு தலைவர் என்பதில் சந்தேகம் இல்லை..மிகவும் இக்கட்டான ஒரு சூழலில் நமது முஸ்லிம் சமூகம் மிகவும் நிதானமாக நடக்க வேண்டி உள்ளது. வெறும் அரசியல் இலாபங்களுக்காக ஒருவரை ஒருவர் காட்டிக்குடுக்காது அரசியல் செய்வது நன்று. Azwer, பைசல் முஸ்தபா, முபாரக் மௌலவி போன்ற கோடரிக்காம்புகளை நம்மவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள் .....அவர்கள் பேரினவாதிகளின் கைக்கூலிகள் .....

    ReplyDelete
  13. Saree...ulama katchiyil eththanai ulamakkal irukkinrarkal????enayya sontha lapaththitkaka ulamakkalin peyarai vikkireenga.

    ReplyDelete
  14. ஒரு சமூகத்தின் முதுகெலும்பு என்று தம்மை வர்ணிப்போரின் சோரம் போதலை தடுக்க முடியாத இயலாமையை, கோழைத்தனத்தை, ஒட்டு மொத்த தோல்வி உணர்வை ஹக்கீம் என்ற தனி நபர் இந்த விவகாரத்தில் சுமந்து கொண்டார் என்பது தான் பொருத்தம்.

    ஆளும் சால்வைகளுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் என்ற பெயரிலும் அகில இலன்கை ஜமிய்யாதுல் உலமா என்ற பெயரிலும் கூட்டிக் கொடுக்கப் போய் ரிவேர்சில் திரும்பியவர்களைப் பற்றி பெரிதாக எந்த செய்தியிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இதற்குப் பின்னால் இருந்த தனித்துவ இஸ்லாமிய இயக்கங்கள் அவர்கள் வருவாய்க்காகத் தங்கியிருக்கும் மாபியாக்கள் எல்லாவற்றையும் இருட்டடிப்பு செய்துவிட்டு படம் ஓட்டுகின்றன நமது ஊடகங்கள்.

    அஸ்வர், பைசர் வகையறாக்களுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத பிழைப்புவாதிகள் திரை மறைவில் உள்ளனர். முஸ்லிம் சமூகத்தை இருட்டிலேயே வைத்திருக்கும் உள்னோக்கத்திலேயே இயங்கும் இந்த மாபியாக்களின் வழமையான கூக்குரல் தான் " நமக்கான தனியான ஊடகம்"

    ReplyDelete
  15. Lost the battle to win the War.This is what Mr Hakeem did, i suppose.His message had been very clear and loud

    ReplyDelete

Powered by Blogger.