சம்மாந்துறையில் முக்கியஸ்தர்கள் முஸ்லிம் காங்கிரஸில் இணைவு (படங்கள்)
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்து வரும் நிலையில் சம்மாந்துறையில் அன்வர் இஸ்மாயில் நேச அணியினர் மற்றும், அங்குள்ள பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டாக்டர் ஐ.எல்.மஜீத், தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தர் சட்டத்தரணி யூ.கே. சலீம் ஆகியோர் தமது ஆதரவாளர்களுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்.
நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (14) கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களின் ஒன்றிணைவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தரான சம்மாந்துறையை பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்தபா வழங்கிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
யூ.எல்.எம். பஷீர், வை.பீ. சலீம் ஆகிய முக்கியஸ்தர்கள் பெரும் எண்ணிக்கையிலான தமது அன்வர் இஸ்மாயில் நேச அணியினர் முழுமையாக முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக கட்சித் தலைவர் அமைச்சர் ஹக்கீமிடம் தெரிவித்தனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் இஸ்மாயிலின் மறைவை தொடர்ந்து தீவிர அரசியல் செயல்பாடுகளில் அதிகம் ஈடுபாடு காட்டாதிருந்துவந்த செல்வாக்கு மிக்க அன்வர் இஸ்மாயில் நேச அணியைச் சேர்ந்தவர்கள் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸிற்கு அதிகரித்து வரும் மக்கள் ஆதரவை கண்டு, சமூகத்தின் அரசியல் விமோசனத்திற்காக தாம் கட்சித் தலைமையோடு கைகோர்த்துள்ளதாகவும், இத் தேர்தலிலும், இனி வரும் தேர்தல்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசார நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடவுள்ளதாகவும் கூறினர்.
அவ்வாறே சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டாக்டர் ஐ.எல்.மஜீத், தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தர் சட்டத்தரணி யூ.கே. சலீம் ஆகியோரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கு முன்வந்துள்ளதை கட்சி வட்டாரம் பெரிதும் வரவேற்றுள்ளதோடு, அதையிட்டு சம்மாந்துறை மக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
அவ்வாறே சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டாக்டர் ஐ.எல்.மஜீத், தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தர் சட்டத்தரணி யூ.கே. சலீம் ஆகியோரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கு முன்வந்துள்ளதை கட்சி வட்டாரம் பெரிதும் வரவேற்றுள்ளதோடு, அதையிட்டு சம்மாந்துறை மக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட வேட்பாளரும், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபைத் தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர், வேட்பாளரும் முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை தலைவருமான நசீர், முஸ்லிம் காங்கிரஸ் அதி உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.இப்ராஹிம் ஆகியோரும் இந்த ஒன்றிணைவின் போது சமூகமளித்திருந்தனர்.



மர்ஹூம் அன்வர் இஸ்மாயிலின் மரணம் திட்டமிட்ட கொலை, யார் எதற்காக செய்தார்கள்,இதனால் பயன் அடைந்தவர்கள் யார் என்பது யாவரும் அறிந்த உண்மை,ஆகையால் சம்மாந்துறை மண்ணில் பிறந்த எவருமே உலகம் அழியும் வரை பொது சன ஐயக்கிய முன்னணிக்கு வாக்களிப்பது பெரும் துரோகமாகும்,
ReplyDeleteஇதை மீறி பொது சன ஐயக்கிய முன்னணிக்கு வாக்களிப்பது,அன்வர் இஸ்மாயிலின் கொலையையும்,முஸ்லிம் மக்களையும் பள்ளிவாசல்களின் ஆக்கிரமிப்பையும் ஆதரிப்பதாகவும்.அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!
மாஷா அல்லாஹ்
ReplyDeleteஅல்லாஹ் அக்பர்
வேறு வார்தையே இல்லை
dr mageed nalla mudivu
ReplyDeletepocket nirappamal irunthal sari.
ReplyDelete