முஸ்லிம்கள் தமது பாவங்களை போக்க நோன்பு உதவவேண்டும் - சரத் ஏக்கநாயக்கா (படம்)
TM. Hafees
இந்து, இஸ்லாம், பௌத்த, கிருஸ்தவ வர்தகர் சங்கங்கள் கலந்துகொண்ட மத்திய மாகாண முதலமைச்சரின் நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்வு கண்டி, கட்டுக்கலை ஜூம்மா பள்ளியில் (12.8.2012) இடம் பெற்றது.
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயகா, மாத்தளை நகரபிதா ஹில்மி கரீம்,மத்திய மாகாண சபை அங்கத்தவர்களான எம்.எஸ்.எம்.எம்.சாபி, எஸ்.எம்.எம். மர்ஜான், ரிஸ்வி பாருக், கண்டி மாநகர சபை அங்கத்தவர் ஏ.எம்.நுஹ்மான் உற்பட பலர் கலந்து கொண்டனர்.
கண்டி தமிழர் வர்த்தக சங்கம், பௌத்த வர்த்தகர் சங்கம், கிருஸ்தவ வர்த்தகர் சங்கம், இஸ்லாமியவர்த்தகர் சங்கம் என்பவற்றின் அங்கத்தினர்கள் அழைக்கப்படடிருந்தனர்.
அங்கு தமிழில் உரையாற்றிய முதலமைச்சர் தெரிவித்தாவது,
மனித மனதைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய செயற்பாடான விரதங்கள் எல்லா சமயத்திலும் பின்பற்றப்படுகின்றன. அப்படியான ஒரு விரத்தை முடித்துக் கொள்ளும் புன்னிய நிகழ்வில் கலந்து கொள்ளக் கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு ஆறாவது வருடமாக நோன்பு துறக்கும் இந்நிகழ்வை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன்.
அதுமட்டுமல்லாது இப்புன்னியங்கள் நிறைந்த சந்தர்பத்தில் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காவும் இன ஒற்றுமைக்காகவும் முஸ்லிம்கள் இறைவனிடம் இறைஞ்சுவதை என்னால் மறக்க முடியாது.
அதே நேரம் முஸ்லிம்கள் தங்கள் பாவக்கறைகளைப் போக்கி இறைவனிடத்தில் உயரிய அந்தஸ்தைப் பெற்று நல்வாழ்வு வாழ இந்த நோன்பு காலம் உதவவேண்டும் என வேண்டுகிறேன் என்றார்.
இரண்டு முஸ்லிம் நிறுவனங்களுக்கு இந்நிகழ்வின் போது முதலைமச்சர் நிதியுதவி வழங்கினார்.






Post a Comment