'அலுகோசு' ஊழியர்களுக்கு அடுத்தவாரம் நியமனம்
TM. Hafees
இன்னும் ஒருவாரத்தில் 'அலுகோசு' என்றழைக்கப்படும் தூக்குத் தண்டனை நிறைவேற்றும் ஊழியர்கள் நியமனம் செய்யவுள்ளதாக சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ. திசாநாயக்கா தெரிவித்தார்.
இதற்கு முன்னர் இலங்கையைப் பொருத்தவரை மன்னர்காலம் முதல் பிரித்ததானியர் காலம் உற்பட பரம்பறை வழிவந்தவர்களே மேற்படி அலுகோசு பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட்டனர். நீண்டகாலமாக தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதை இடை நிறுத்தி வைத்திருந்ததன் காரணத்தால் ஏற்கனவே அப்பதவியில் இருந்தவர்கள் ஓய்வு பெற்றதன் பின் புதியவர்கள் நியமிக்கப்படவில்லை.
அண்மையில் கோறப்பட வர்த்தமாணி அறிவித்தலின்படி 80 பேர் இப்பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் இருவர் தகுதி அடிப்படையில் நேர்முகப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டு ஒருவர் கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கும் மற்றவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கும் நியமனம் செய்யப்படவுள்ளனர். இன்னும் ஒருவார காலத்தில் இந்நியமனங்கள் வழங்கப்பட இருப்பதாக திசாநாயக்கா தெரிவித்தார்.
போகம்பறை மற்றும் வெலிக்கடைச் சிறைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 844 பேர் மரணதண்டனைக்காகக் காத்து நிற்கின்றனர். இவர்களில் 19 பேர் பெண்களாகும். இப்பெண்கள் 19 பேர் உற்பட மொத்தம் 453 பேர் மேன்முறையீடு செய்துள்ளனர். எனவே மேற்படி தொகை போக மரணதண்டனை நிறைவேற்ற வேண்டியவர்கள் 372 பேர்மீதமாக இருப்பதாகவும் அதனை துரிதப்படுத்தும் விடயமாகவே அல்கோசுகள் விரைவில் நியமனம் செய்ய உள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

'நடக்குமென்பார் நடக்காது' என்ற கதை தொடருமா?
ReplyDelete