தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் ஒரு சிறு சம்பவமே - அஸ்வர் எம்.பி
காவியுடை தரித்த பயங்கரவாதிகள் எனும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் கருத்து இந்நாட்டில் ஆண்டாண்டு காலமாக பாரம்பரியத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் சிங்கள - முஸ்லிம் நல்லுறவிற்கு விழுந்த பாரிய பேரிடியாகவே நான் கருதுகிறேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார். கிண்ணியாவில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காரியாலய திறப்பு விழா வில் கலந்து கொண்டுரையாற்றும் போதே அஸ்வர் எம்.பி இவ்வாறு கூறினார்.
முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் கூட எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இது போன்றதொரு வார்த்தைப் பிரயோகத்தை உபயோகித்தது கிடையாது. அவர் தீகவாபி விகாரைக்கு அஷ்ரப் பாதை அமைத்து, மதிற்சுவர்கட்டி, தொலைபேசி இணைப்பு பெற்றுக் கொடுத்து நல்லுறவைப் பேணினார். பெளத்த சிங்கள மக்களுடன் ஒற்றுமையுடன் வாழ்வதே அவரது நோக்கமாக இருந்தது. ஐ.தே.க சிங்கள உறுப்பினர்கள் எவருமே செய்யாத இவற்றைச் செய்தமைக்காக பெளத்த துறவிகளால் பாராட்டப்பட்டார்.
ஆனால் தற்போதைய மு.கா தலைவரோ வாக்குகளைப் பெறுவதற்காக இன, மத, கோஷம் எழுப்பி சிங்கள - முஸ்லிம் ஒற்றுமைக்குக் குந்தகத்தை விளைவித்துள்ளார். வாக்குகளை பெற பிற சமூக, சமய, இனங்களை சாடினால் விளைவுகள் பாரதூரமாகும் என்பது நன்கு புலனாகியுள்ளது. நமது முஸ்லிம் தலைவர்களான ரி.பி. ஐ¡யா,கலாநிதி பதியுதீன் முஹம்மத் போன்றோர் கட்டிக்காத்துவந்த சிங்கள முஸ்லிம் ஒற்றுமை பேணப்பட வேண்டும். அவர்கள் சிங்கள பெளத்த மக்களுடன் மட்டுமல்ல தமிழ் மக்களுடனும் நல்லுறவுடன் வாழ வேண்டுமென முஸ்லிம்களுக்கு வழிகாட்டினார்கள் என்றும் அஸ்வர் எம்.பி தெரிவித்தார்.
எனவே எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி, அதன் தோழ மைக்கட்சிகள், வெற்றிலைச்சின்னம் என்பவற்றுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எண்ணமாகும். அதன் மூலமே நாட்டில் தொடர்ந்தும் அபிவிருத்தியையும், சமாதானத்தையும் கட்சிக்காப்பாற்ற முடியும்.
தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் ஒரு சிறு சம்பவம் அதனை நாம் உரிய தரப்புடன் பேசி உடனடியாகவே தீர்த்து வைத்துவிட்டோம். இன்று அப்பள்ளியில் முன்னரை விடவும் சிறப்பாக ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு தொழுகை நடத்துகிறார்கள். இதுபோன்று வேறு சில இடங்களில் சிறுசிறு சம்பவங்கள் இடம்பெற்றது உண்மையே. ஆனால் அவற்றை அரசியலுக்காக ஊதிப் பெருப்பிக்கக் கூடாது எனவும் அஸ்வர் எம்.பி. தெரிவித்தார். தேசிய வானொலியில் 5வேளை தொழுகைகளையும் சகலரும் கேட்கும் வகையில் ஒலிக்கச் செய்தவர் எமது ஜனாதிபதி என்பதை முஸ்லிம்கள் மறந்துவிடக் கூடாது என்றும் அஸ்வர் எம்.பி. தெரிவித்தார்.

ஹகீமுக்கு ஏசியாகிவிட்டது.
ReplyDelete- மக்களிடமிருந்து தூரமாக்க.
அஷ்ரபுக்கு புகழ் பாடியாகிவிட்டது.
- மக்களைத் தம்பக்கம் இழுக்க.
மகிந்தவின் விருப்பத்தைச் சொல்லியாகிவிட்டது.
- தனது நலன் காக்க.
ஐயா அஸவர் அவர்களே!
உங்களது பேச்சில் நீங்கள் அறியாமலே ஹகீமுக்கு ஒத்துப் பாடியிருக்கின்றீர்கள் என்பதனை நீங்கள் உணரவில்லையா? ஒப்புக் கொண்டீர்களே பௌத்த காடைத்தனம் களம் காண்கின்றது என்பதனை.
சொன்னதைச் சொல்லும் பணிதானே நீங்கள் முன்னர் செய்யதது. அது உணர்ந்து செய்யும் பணி இல்லைதானே. அன்றும் பாரளுமன்றத்தில் அதைத்தான் செய்தீர்கள். இன்றும் அதனைத்தான் செய்கின்றீர்கள். என்ன! கதிரை மாறியிருக்கின்றது. அவ்வளவுதான்.
அது சரி, வானொலியில் அதான் சொல்வது என்பது மார்க்கக் கடமை இல்லையே! அதற்குத்தானே பள்ளிவாயல்களும் முஅத்தின்களும் இருக்கின்றாகள். பள்ளிகளை மூடிவிட்டு வானொலியில் அதான் சொல்லி வீட்டில் தொழச் சொல்வீர்கள் போல இருக்கின்றதே!
தேவையானதைச் செய்ய முயற்சியுங்கள். நாங்கள் விழித்துக்கொண்டிருக்கின்றோம்.
அஸ்வர் அவர்களே இது சாதரண விடயம் அல்ல பாரதூரமான விடயம் சிறுபான்மை இனத்தின் மெலான மிக பெரிய ஆக்கிரமிப்பு குணத்தை வெளிக்காட்டி நிட்கும் நிகழ்வு அதனை பேசி தீர்க கூடிய சூழல் இருக்கிறது ஆனால் அதட்காக சாதாரணமாக இதனை எடுத்துகொள்ள முடியாது ஆனால் வடக்கிலும் கிழக்கிலும் மஸ்ஜிதுகளுக்கு நடந்த கொடூரங்களுடன் ஒப்பிட்டு நோக்கிநால் மட்டுமே இந்த விடயம் சிறியதாக தெறியும் வடக்கில் 200 மேட்பட்ட முஸ்லிம்களின் மஸ்ஜிதுகளும் கலாசார மையங்களும் புலிகளால் அழிதொழிக்கபட்டு அவை மீண்டும் உயிபிக்க பட பல்வேறு தடைகளை புலி ஆதரவு சக்திகள் அதிகார ரூபத்திலும் நீதி நிர்வாக ரூபத்திலும் போட்டுகொண்டிருக்கின்ற இந்த வேளை
ReplyDeleteபுலிகள் இருந்த தைரியதில் பதிவு செய்யபட்ட மட்டகளப்பு நொச்சிமுனை முகைதீன் ஜும்ஃஆ மஸ்ஜித் R/776 BT.69
என்ற பதிவு இலக்க மஸ்ஜித் உடைத்து எரியபட்டு அதட்குமேலால் புலி ஆதரவு அரச அதிகாரிகளின் துணையுடன் தரிசனம் அங்க வீனர் பாடசாலை கட்டபட்டுள்ளது, அதேபோல் புலிகளின் அழிவுக்கு பின்னர் அதே அரச புலி ஆதரவு நிர்வாக சக்திகளின் துணை கொண்டு
R/1302/BT.152
என்ற பதிவு இலக்க மட்டு நகர் கல்லியன்காட்டில் அமைந்திருந்த மஸ்ஜித் உடைதெறியபட்டு அதட்குமேலால் பிரம்மகுமார இராஜயோக மண்டபம் கட்டபட்டுள்ளது, நேற்று இரவு 11.08.20112 அன்று மட்டகளப்பு உன்னிசையில் அமைந்துள்ள
R/1434/BT.179 என்ற பதிவு இலக்க முகைதீன் ஜும்ஃஆ மஸ்ஜித் புலி ஆதரவு சக்திகளால் தீட்டு கொழுத்தி அழித்து நாசமாக்கபட்டுள்ளது எனவே தம்புள்ளை மஸ்ஜிதை போன்று பெரும் அச்சுருதல் விடுகபடாமலே அழிதொழிக்கபட்டு தம்புள்ளை விடயத்தைவிடவும் விஞ்சி நிடகும் இந்த மஸ்ஜிதுகளின் நிலை குறித்தும் எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும் மீண்டும் இந்த மஸ்ஜிதுகள் அந்த இடங்களில் நிலைபெர முயட்சிக்க வேண்டும் தென் இலங்கையைவிட மஸ்ஜிதுகளுக்கு வடகிழக்கிலேயே மிக அநியாயங்களும் அட்டூழியங்களும் நிகழ்ந்திருப்பதை உன்னிச்சை மஸ்ஜித் எரிப்பு நிகழு மீண்டும் என்மக்கு நிரூபித்து இருபதால் இந்த விடயம் குறித்தும் நீங்கள் உடபட அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவும் தென் இலங்கை முஸ்லிம்களும் குரல் கொடுக்கவும் தீஇட்டு கொழுதியோர் கைது செய்யபட்டு தன்டிக்கபடவும் மீண்டும் இந்த மஸ்ஜிதுகள் அவ்விடத்தில் உயிர்பிக்க படவும் சகல வலமைகளையும் சகல முஸ்லிம்களும் பாவிக்க வேண்டும் என மிக தாள்மையாக வேன்டிகொள்கிறேன்
பௌத்த துறவிகளால் கூட பாராட்டப்பட்ட அஷ்ரப் அவர்களுக்கு நீங்கள் அந்த நேரத்தில் கொடுத்த இடையூறுகள் யாபஹம் இருக்கிறதா ???? தம்புள்ள பளிவாசல் விடயம் உங்களுக்கு வேண்டுமானால் சிறு விடயமாக இருக்கலாம் முஸ்லிம்களுக்கு இருக்காது திருவாளர் அஸ்வர் அவர்களே ! உங்களுது இருப்பை உறுதிப்படுத்த மார்க்க விடயத்தில் வரவேண்டாம்
ReplyDeletenumber1 joker
ReplyDelete