முஸ்லிம்கள் முதலமைச்சர் கோரிக்கையை முன்வைப்பதில் தவறில்லை - பிள்ளையான்
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் சகோதரர்களும் கிட்டத்தட்ட சம அளவில் வாழ்கின்றனர். அந்தச் சமூக மக்கள் அவ்வாறான கோரிக்கையொன்றை எழுப்புவதில் என்ன தவறு இருக்கிறது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,
நான் ஒரு தமிழ் மகன். எனினும் முஸ்லிம்களுடைய தேவையில் எனக்கு அக்கறை இல்லை என்றவாறு நான் நடந்து கொள்ளவில்லை. முஸ்லிம்களுடைய தேவையை உள்ளன்புடன் நிறைவேற்றினேன். முதலமைச்சர் முஸ்லிமாக இல்லையே என எந்த முஸ்லிமும் எண்ணாத வகையிலேயே என் அரசியல் பணிகள் அமைந்தன.
என்னை நாடி வந்த முஸ்லிம் தமிழ் மக்களுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்தேன். இவ்வாறு சமன் செய்து சீர்தூக்கும் தராசு போலப் பணிகளைத் தமிழ், முஸ்லிம் என்ற பேதமின்றி உதவும் பண்பான முஸ்லிம்கள் கிழக்கில் இருக்கின்றார்கள். கிழக்கிலே பதவியில் இருக்கும் முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் என்னை வேற்றுக் கண்கொண்டு பார்க்காது உள்ளன்புடன் பரிவுடன் எனக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
இத்தகைய சிறப்பு நிலையிலேதான் கிழக்கின் தமிழ் - முஸ்லிம் உறவு பரிணமிக்கிறது. தமிழ் மகனாயினும் முஸ்லிம் மகனாயினும் கிழக்கில் பிறந்து வாழும் எமது குறிக்கோள் கிழக்கின் சுபீட்சமும் மகிழ்ச்சிகரமான அமைதி வாழ்வுமே என்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன்

எங்கேயோ உதைக்கிறதே.......!
ReplyDeleteathuthaaan kathankudiyil pallil 103 periyum erabur il 150 perayum konrathu ungal kaalangalil saith muslimkalukku saith matroru sevaiyo?
ReplyDeleteதம்பி பிள்ளையான் நேற்று இரவு மட்டகளப்பு உன்னிச்சை பள்ளி தீ வைத்தது உங்கள் அடி ஆட்கள்தான் ஐயா நானும் மட்டகளப்பில் பிறந்து வளர்ந்தவந்தான் ஐயா உங்கள் பற்றி நல்லவைய தெரியும் உங்கள் அராஜகம் மட்டகளப்பில் எப்படி என்று இப்ப மட்டும் என்ன முஸ்லிம்களா பற்றி அன்பு 1989 எல்லாம் தெரியும் ஐயா அதை இன்னும் நாங்கள் மறக்க வில்லை ஐயா நீங்கா பதவிக்கு வந்து ஒரு வாரத்துக்குள் எங்கள் ஏறாவூர் இளைஜர்கள் இரண்டு பேரை பலி எடுத்திர்கள் உங்களுக்கு மறந்து போகலாம் நாங்கள் மறக்கவில்லை ஐயா ...... ஏறாவூரில் இருந்து ரஹீம் .........
ReplyDelete