உதவி தேடுகிறார்..!
வத்தளை - மாபொலை இல 30, முத்து ராஜமாவத்தையில் வசிக்கும் மொஹமட் நிசார்ட்ன் அலிபுதீனின் 6 வயது மகன் மொகமட் சல்மன்கான் வயிற்றில் ஏற்பட்ட எனியா எனும் வியாதியால் அவஸ்தைப்படுகின்றார்.
வயிற்றின் வெளிப்புறத்தில் பந்து வடிவில் காணப்படும் இந்நோயை கடந்த பல வருடங்களாக கொழும்பு சிறுவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்றும் எவ்வித பலனும் கிடைக்காது நாளுக்கு நாள் வியாதியால் அவஸ்தைப்படுகிறார். இவ்வியாதிக்கு சிகிச்சையளிக்க நன்னோக்கோடு உதவிபுரிய வைத்தியர் சஞ்சய அபேகுண சேகர முன் வந்துள்ளார். மருத்துவத்திற்கு மாத்திரம் ரூபா இரண்டரை இலட்சம் செலவாகுமென்று கூறியுள்ளார்.
நிரந்தர தொழிலற்று வறுமைக்கோட்டில் வாழும் எங்கள் குடும்பம் இச் செலவினத்தை ஈடு செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறது. என் மகனின் உயிரைக் காப்பாற்ற பரோபகாரிகளின் உதவியை வேண்டி நிற்கிறேன். தங்களுடைய உதவிகளை M.N, ALIMUDEEN - COMMERCIAL BANK, WATTALA BRANCH- A/C 8560025151 அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் தொ.இல 0777513154

Post a Comment