Header Ads



அநியாயங்களை பாரத்துக் கொண்டிருக்க முடியாது - அஷ்ஷேய்க் அப்துல் ரஸ்ஸாக்

இர்ஷாத் றஹ்மத்துல்லா

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்க முனைந்தால் அவர்களுக்கு எதிராக நீதிமன்றம் சென்று நியாயத்தை பெற்றுக் கொடுக்க பேவதாக  ரஷ்ஷாக் பவுண்டேஷன் நிறுவன பணிப்பாளரும்,பிரபல தொழிலதிபருமான் தோப்பூர் அஷ்ஷேய்க் அப்துல் ரஸ்ஸாக் எச்சரிக்கை செய்துள்ளார்.

தற்போது பேசப்படும் மன்னார் விவகாரம் குறித்து கருத்துரைக்கும் போது மேலும் அவர் கூறுகையில்,

வடக்கும் –கிழக்கும் பிரிந்திரப்பதற்கு முஸ்லிம்க்ள விருப்பத்துடன் இருந்த போதும்,அன்று அதற்கெதிராக பயங்கரவாத செயற்பாடுகள் இடம் கொடுக்கவில்லை.இந்த பயங்கரவாதம் ஒழிக்கப்படுவதற்கு வன்னி மாவட்ட மூவின மக்களால் தெரிவு செய்யப்ட்ட அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் நடவடிக்கையெடுக்கும் போது அதனை இனவாதமாக ,மதவாதமாக சித்தரித்து முஸ்லிம்களை விரட்டியடிக்கும் பணியினை இந்த சக்திகள் செய்வதை முஸ்லிம்கள் இன்று அறிந்து கொண்டுள்ளனர்.

மன்னார் முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைக்கப்படும் போது ,அதனை பாரத்துக்கொண்டு இருப்பதற்கு நாம் சடவாத கொள்கையினை ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல.அல்குர்ஆனை –அல்-ஹதீஸை ஏற்று நடக்கும் எமது சமூகத்திற்கு எதிரதாக கட்டவிழ்த்து விடப்படும்,அநியாயங்களை பாரத்துக் கொண்டிருக்க முடியாது.

வடக்கில் முஸ்லிம்களின் பூர்வீகத்தை அழித்தொழிப்பதற்கு கங்கனக்கட்டிக் கொண்டு அலையும் சில மதவாத சக்திகளின் கூட்டினை தகர்த்து,அவர்களது முகத்திரைகளை கிழித்தெரியும் நேரம் முழு முஸ்லிம் சமூகத்திற்கும் தற்போது கிடைத்துள்ளது.இந்த சந்தரப்பத்த்தை பயன்படுத்திக் கொண்டு இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீனின் தலைமையில் ஒன்றுபட்டு எமது சமூகத்தின் விமோசனத்திற்கும்,வடிவுக்கும் தயாராக வேண்டிய நேரம் ஏற்பட்டுள்ளதாகவும் அஷ்ஷேயக் அப்துர் ரஸ்ஸாக் தெரிவித்துள்ள்ளார்.

2 comments:

  1. அஷெய்க் அப்துல் ரஸ்ஸாக் அவர்களே, தயவுசெய்து மன்னார் அநீதவானுக்கு எதிராக, சட்ட மீறல், அதிகார துஸ்பிரயோகம், நீதிமன்றத்திட்கு வெளியில், வீதியில் நின்று பொதுமக்களை சுடுமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டது போன்ற குற்றச் சாட்டுக்களுக்காக வழக்கொன்றை தாக்கல் செய்யுங்கள். மேலும் இப்புலி வால் அநீதிபதியால் வழக்கிற்கு இடையூறு ஏற்படும் என்பதால் பதவி இடைநிறுத்தல் உத்தரவொன்றையும் உச்ச நீதிமன்றத்தில் கோருங்கள்.


    அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் பொருளாதார விருத்திகளைத் தருவானாக.

    ReplyDelete
  2. Dear Brother Razzak, don't tell what u r going to do. DO IT QUICKLY. The phrase..." going to do...." belongs to our politicians. They will tell but won't do. Please u don't follow it. Almighty Allah will help u.

    ReplyDelete

Powered by Blogger.