Header Ads



சவூதி அரேபியாவில் புத்தர் சிலைவைத்து பூஜை செய்த இலங்கையர் கைது

சவுதி அரேபியாவில் பௌத்த பூஜைகளை நடத்திய இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நாட்டின் ஷரியா சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரை மீட்கும் பொருட்டு, வெளியுறவுகள் துறை அமைச்ச, சவுதியில் உள்ள தூதரக அலுவலகத்தின் ஊடாக நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சவுதியில் தொழில்புரிந்து வந்த நிலையில், அவர் தங்கி இருந்த இடத்தில் புத்தர் சிலை ஒன்றை வைத்து, பூஜை செய்து வந்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

3 comments:

  1. தனக்கு விருப்பமான மதத்தை பின்பற்றுவதும், அந்த மத வழிபாடுகளை செய்வதும் தனி மனிதனின் உரிமை. அப்படி இருக்கும்போது இவரை கைதுசெய்தது என்ன அநியாயம்? ஒரு நாட்டடின் சட்டத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இதை நடுநிலையில் இருந்து பார்க்கும்போது ஒரு சிங்களவர் தனது தெய்வத்தை வணங்கியதற்காய் கைதுசெய்யப்பட்டார் என்றே இந்த செய்தியை சொல்ல வேண்டும். பௌத்த நாடாகிய இலங்கையில் முஸ்லிம்களாகிய எமக்கு இவ்வளவு சுதந்திரம் தந்திருக்கும்போது ஒரு பௌத்த சகோதரனுக்கு இவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டிருக்கின்ற நேரம் நாம் அவருக்காய் இலங்கையர் என்ற வகையில் குரல் கொடுக்க வேண்டும். ரிஷானா நபீக்குக்கு பிரச்சினை என்றதும் அவர் ஒரு இலங்கையர் என்ற எண்ணத்தில்தான் ரிஷானாவுக்காக இலங்கை அரசும், இன மத பேதம் எதுவுமின்றி எம் நாட்டின் பெரும்பான்மை மக்களும் குரல்கொடுத்தனர். இதே நிலைதான் இப்போது இந்த சகோதரனுக்கு ஏற்பட்டுள்ளது. எத்தனை முஸ்லிம்களின் குரல் இதற்காய் ஒலிக்கிறது என்று பார்ப்போம்.

    ReplyDelete
  2. Yes brother I agree with you

    ReplyDelete
  3. Good we have to help him,,, but all saudi lands are 100% Punniya Poomi, so we have to ask the idea from Dambulla Pikku. isn't it????

    ReplyDelete

Powered by Blogger.