Header Ads



எகிப்து ஜனாதிபதிக்கு பென்ஜமின் நெதன்யாஹு அவசர கடிதம்

எகிப்திலிருந்து ஹபிபுல்லா பைஸ்

இஸ்ரேலின் பிரதமர் “பின்யாமின் நேதன்யாஹோ” எகிப்தின் ஜனாதிபதி “முஹம்மது முர்சிக்கு” கடிதம் ஓன்று அனுப்பியுள்ளார் .அந்த கடிதத்தில் அவர் “இரண்டு நாடுகளுக்கிடையிலான சமாதான உடன்படிக்கை பாதுகாக்கப்படவேண்டும் என்றும் , உறவுகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்''

மேலும் இந்த செய்தி பற்றி இஸ்ரேலின் செய்தி வெளியீட்டகம் தெரிவிக்கையில்,

“அவர் இரு நாடுகளும் சமாதானமாகவும் , ஒத்துழைப்போடும் இருக்கவே விரும்புகிறார் “ என தெரிவித்துள்ளது. அவர் அனுப்பிய இந்த செய்தி எகிப்திலுள்ள இஸ்ரேலிய தூதுதரத்தின் ஊடக எகிப்தின் “ஜனாதிபதி முஹம்மது முர்சிக்கு” கையளிக்கப்பட்டதாக இஸ்ரேலிய பத்திரிக்கை ஓன்று உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் அவர் இந்த கடிதத்தில் “ முஹம்மது முர்சி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதற்கு தன்னுடைய வாழ்த்தையும் , இன்னும் புதிய அரசாங்கத்தோடு தம்முடைய உறவை பலப்படுத்தி கொள்ள விரும்புவதாகவும் “ தெரிவித்துள்ளார் .

மேலும் அவர் “இரு நாட்டினுடைய உறவு இரு நாட்டின் சமாதானத்திற்கு வித்திடும்” எனவும் தெரிவித்துள்ளார் . மேலும் இஸ்ரேலிய பத்திரிக்கை வெளியீட்டகம் தெரிவிக்கையில் ஒரு சில பாதுகாப்பு காரணங்களுக்காக இருவருக்கிடையிலான வாழ்த்து பரிமாற்றத்தை தொலை பேசியூடாக தெரிவிக்காமல் கடிதம் மூலம் தெரிவித்தக்கவும் அது தெரிவித்துள்ளது.

மேலும் இஸ்ரேலின் பிரதமர் தெரிவிக்கையில் “எகிப்தில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட முதல் ஜனாதிபதி முஹம்மது முர்சி” எனவும் புகழ்ந்துரைத்துள்ளர் .இந்த வாழ்த்து செய்திக்கு இது வரை எந்த பதிலும் அளிக்கப்பட்டதாக தெரியவில்லை . அது மட்டுமல்லாமல் இந்த கடிதத்தை எந்த கோணத்தில் எகிப்தின் ஜனாதிபதி “முஹம்மது முர்சி” கையாள்வார் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

 

No comments

Powered by Blogger.