Header Ads



உளவு விமானத்தை கடத்திய அமெரிக்க மாணவர்கள்

அப்போது டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்கள் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதை கடத்தியது தெரியவந்தது. அவர்கள் உள்நாட்டு பாதுகாப்பு உளவுத்துறை கம்ப்யூட்டரில் இருந்து நடுவானில் பறந்து கொண்டிருந்த ஆளில்லா விமானத்தின் தொழில்நுட்பத்தை திருடி அதை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

டெக்சாஸ் பல்கலைக்கழக மைதானத்தில் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. ஆஸ்டின் ரேடியோ நேவி கேசன் ஆய்வக பேராசிரியர் ஹம்பிரேஸ் என்பவர் தலைவராக இருந்தார்.

இவரது குழுவை சேர்ந்த மாணவர்கள் உளவுத்துறையின் ஆளில்லா விமானத்தை கடத்த இந்திய ரூ.60 ஆயிரம் பந்தயம் கட்டினார்கள். பந்தயத்தை ஏற்றுக்கொண்ட மாணவர் அந்த விமானத்தை தந்திரமாக கடத்தி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறான். இந்த தகவலை பேராசிரயர் ஹம்பிரேஸ் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, இதைவிட அதிநவீன ஆளில்லா விமானத்தை எங்களது மாணவர்களால் தயாரிக்க முடியும். அந்த அளவு திறமையானவர்கள் என கூறினார்.

ஆளில்லா விமானத்தை கடத்தியது இது முதல் முறை அல்ல கடந்த வாரம் நியூமெக்சிகோவில் பறந்த இதுபோன்ற விமானம் ரிமோட் கண்ட்ரோல் மூலம் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Namakku een seyya mudiyaathu thambimaarkale?

    ReplyDelete

Powered by Blogger.