தமிழ் சமூகம் தமது உரிமைகளை பெற்றுக்கொள்ள கிழக்குத் தேர்தல் பொன்னான வாய்ப்பு - ரவூப் ஹக்கீம்
ரவூப் ஹஸீர்
தமிழ் சமூகம் உரிமைகளை பெற்றுக் கொள்ள பொன்னான சந்தர்ப்பம் கிழக்கு மாகாண சபை தேர்தலாகும். அரசுடன் கூட்டாட்சி அமைக்க தமிழர் விடுதலைக் கூட்டணி விரும்பினால் ஒதுங்கி நின்று உதவ முஸ்லிம் காங்கிரஸ் தயார் எனவும் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை காலை முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ரவுப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இது பற்றி தொடர்ந்து கூறுகையில்,
நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஆட்சி அமைக்கும் அறுதிப் பெரும்பான்மையை பெரும் வாய்ப்பை முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைகளுக்கு இணங்காததால் அரசு இழந்திருக்கிறது.
“ஒரு கட்சியும் தனியாக ஆட்சி அமைக்க முடியாத தேர்தல் முடிவுகளே அமையும் என்பது உறுதி. அரசு கிழக்கில் ஆட்சி அமைப்பதாக இருந்தால் முஸ்லிம் காங்கிரஸின் அனுசரனை அதற்கு கட்டாயம் தேவைப்படும். தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமது உறுப்பினர்களை வைத்து, அரசுடன் பேரம் பேசி கூட்டாட்சி அமைக்கலாம்.
தமிழ் சமூகம் உரிமைகளை பெற்றுக் கொள்ளவும் மூவினங்களுக்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்தவும் இது அரியதொரு வாய்ப்பாகும். இந்த வாய்ப்பை தமிழ் விடுதலைக் கூட்டணி பயன்படுத்த விரும்பினால் முஸ்லிம் காங்கிரஸ் தனது பேரம் பேசும் வாய்ப்பை விட்டுக் கொடுத்து, ஒதுங்கி நின்று உதவ எப்போதும் தயாராகவே இருக்கிறது“ என்றும் தெரிவித்தார்.

Post a Comment