கோரிக்கைகளை வென்றெடுக்க போராட்டமே சிறந்த ஆயுதம் - ஜே.வி.பி.
கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள போராட்டங்களே சிறந்த ஆயுதம் என தேசிய தொழிற்சங்கத்தின் தலைவர் கே.டி.லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தின் ஊடாகவோ, மாகாண சபைகளின் ஊடாகவோ அல்லது பிரதேச சபைகளின் ஊடாகவோ எந்தவொரு கோரிக்கையும் வெற்றிகொள்ளப்படவில்லை. போராட்டங்களை விடுத்து வேறு எந்த வகையிலும் கோரிக்கைகளை வெற்றிகொள்ள முடியாது. இதுவரை காலமும் அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களே வெற்றியளித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை வரலாற்றில் பெருந்தெருக்களில் நடத்தபட்ட போராட்டங்களின் ஊடாகவே அநேகமான கோரி்க்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் நட்ட ஈட்டினைப் பெறவேண்டுமாயின் மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Post a Comment