பிரிட்டன் பாஸ் பெறுவதற்கு மகாராணியை கடவுள் காப்பாற்றுவார் என கூறவேண்டும்..!
குடியேற்றவாசிகளாகச் செல்வதற்கு விரும்புவோர் இனிமேல் “தேசப்பற்று பரீட்சை’யை எதிர்கொள்ள வேண்டும். அந்நாட்டு குடிவரவுத் துறை அமைச்சர் தெரேசா மே அதிகளவான “பிரிட்டிஷ் கலாசாரப் பரீட்சையை’ அறிமுகப்படுத்த விருப்பதாக “த கார்டியன்’ பத்திரிகை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
பிரிட்டிஷ் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிப்போர், ராணியை கடவுள் காப்பாற்றுவார்’ என்ற வசனத்தை உச்சாடனம் செய்ய வேண்டும்.
அத்துடன் வின்ஸ்டன் சேர்ச்சில், பைரன்பிரபு, புளோரன் நைற்றிங்கேல், வில்லியம் ஷேக்ஸ்பியர் பற்றி அறிந்திருக்க வேண்டும்.
பிரிட்டனின் புதிய பிரஜைகளாக வரவிரும்புவோருக்கு இந்தத் தேசப்பற்று வழிகாட்டல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அதேவேளை பிரிட்டனின் தற்போதைய நடைமுறையிலுள்ள உத்தியோகபூர்வமான விடயங்களில் சிலவற்றை தெரேசா மே நீக்கியுள்ளார். மனித உரிமைகள் சட்டம் மற்றும் நலன்புரி அனுகூலங்களைப் பெற்றுக்கொள்வது எவ்வாறு என்பது தொடர்பான வழிகாட்டல்கள் நீக்கப்படவுள்ளது. மேலும் காஸ் மீற்றரை வாசிப்பது, வீட்டுக்கான காப்புறுதிகளை பெற்றுக்கொள்வது, உள்ளூராட்சி சபையுடன் விடயங்களைக் கையாள்வது போன்ற விடயங்களும் வழிகாட்டல் குறிப்பில் கைவிடப்படவுள்ளது.
இதற்குப் பதிலாக பிரிட்டன் வரலாற்று ரீதியாக “கிறிஸ்தவ நாடு’ என்றும் “நீண்ட புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டது என்பது பற்றியும் கன்சர் வேட்டிவ் கட்சி அமைச்சர்கள் புதிய குடியேற்றவாசிகளுக்கு கூற விரும்புவதாக கார்டியன் குறிப்பிட்டிருக்கிறது.
வருடாந்தம் 80 ஆயிரம் பேர் பிரிட்டிஷ் பிரஜாவுரிமைக்கான பரீட்சைக்கு தோற்றுகின்றனர். 2003 இல் இதனை தொழில் கட்சி அரசு அறிமுகப்படுத்தியிருந்தது

Post a Comment