எமக்கு வெளிநாட்டுக் கொள்கை தேவையில்லை - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
கண்டியிலிருந்து மொஹமட் ஹபீஸ்
வடக்கு, தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கு இம்மாதம் இறுதியில் விலைமனுக்கள் கோரப்படவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று(1.7.2012) கண்டியில் வைத்துத் தெரிவித்தார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம் பெற்ற கூட்டமொன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
தென் மாகாணத்திலிருந்து ஏற்கனவே கொழும்பிற்கு அதிவேக வீதி அமைக்கப்பட்டுள்ளது. அதன் இரண்டாம் கட்டம் கொழும்பிலிருந்து பொல்கஹவெல ஊடாக கண்டி – குருநாகல் வீதியை ஹேதெனிய என்ற இடத்தில் சந்திக்கும்.
மற்றொறு அதிவேக நெடுஞ்சாலை கண்டிக்கும் குருநாகலலிற்கும் இடையே அமைக்கப்படும். எனவே தெற்கிலிருந்து கொழும்பு, பொல்கஹவெல, ஹேதெனிய, குருநாகல், தம்புள்ள, ஊடாக வடக்கு கிழக்கை இப்பாதை இணைக்கு மென்று தெரிவித்தார்.
வயற்காணிகளை மண்மேடாக மாற்றும் விடயத்தை அனுமதிக்க முடியாது என்றும் இதற்கு உள்ளுராட்சி அமைப்புக்களின் தலைவர்கள் பொறுப்புக் கூறவேண்டுமென்றார். மலைப்பிரதேசங்களில் காடழிப்பை தடுக்க கேப்பன்டைன், மற்றும் யூக்லிஸ் மரங்கள் நடப்படுகின்றன. இவை வெளிநாட்டு இனங்களாகும். நாம் சுதேச கொள்ளையைப் பின்பற்றும் நாடு எனவே எமக்கு வெளிநாட்டுக் கொள்கை தேவையில்லை. உள்ளுர் தேசிய மரங்களை நடுவதன் மூலம் நல்ல பயனைப் பெறமுடியும். அவற்றின் பழங்கள் விலங்குகளுக்கும் மனிதருக்கும் உணவாக அமையும்.
ஹத்தரலியத்தை புதிய நகர அபிவிருத்தித் திட்டம், கம்பளை வைத்திய சாலைக்கான ஜந்து மாடிக்கட்டிடம் என்பன வெறுமனே நினைவுப் பலகைகளை மட்டுமே கொண்டுள்ளன. இவ்வாறு நடைமுறைப் படுத்தப்பட முடியாத அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என தமது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
உலப்பனை பிரதேசத்தில் கடந்த 12 வருடங்களாக ஒரு பாலம் கட்டப் படுகிறது. இது ஏன்? ஒரு அபிவிருத்திப் பணியை மேற்கொள்ளமுன் அதற்கான திட்ட அமுலாக்க வரைபு சமர்பிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டால் மட்டுமே அடிக்கல் நாட்டப்படவேண்டுமென்றார்.
உலப்பனை பிரதேசத்தில் கடந்த 12 வருடங்களாக ஒரு பாலம் கட்டப் படுகிறது. இது ஏன்? ஒரு அபிவிருத்திப் பணியை மேற்கொள்ளமுன் அதற்கான திட்ட அமுலாக்க வரைபு சமர்பிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டால் மட்டுமே அடிக்கல் நாட்டப்படவேண்டுமென்றார்.
இக்கலந்துரையாடலில் அமைச்சர்கள், சிரேஷ்ட அமைச்சர்கள், கண்டி மாவட்ட எம்.பீக்கள், கண்டி மாவட்ட உள்ளுராட்சி சபைத் தலைவர்கள், அரச திணைக்களத் தலைவர்கள்,அமைச்சுக்களின் செயலாளர்கள் உற்படப் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment