Header Ads



தமிழ் ஊடகங்களின் இருட்டடிப்பு - முஸ்லிம்கள் இனியாவது சிந்திப்பார்களா..??

உம்மா

நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை 27-07-2012 அன்று முஸ்லிம்கள் அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பை சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் விடுத்திருந்தது. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை இந்த ஆர்பாட்டத்திற்கு தமது ஆதரவையும் வெளிப்படுத்தியிருந்தது.

வடக்கு முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், மன்னார் உப்புக்குளத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருந்தன. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முஸ்லிம்கள் சார்பில் ஜனாதிபதி செயலகத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் முஸ்லிம்கள் பரவலாக வசிக்கும் பகுதிகளில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் பற்றிய செய்திகள், புகைப்படங்களை பிரசுரிப்பதிலிருந்து தமிழ் ஊடகங்கள் பின்வாங்கிவிட்டன. அநேகமான தமிழ் ஊடகங்களுக்கு இவ்வாறான ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்ற செய்தியை பதிவிடுவதற்கு மனம் வரவேயில்லை.

குறிப்பாக தமிழ் இணைய ஊடகங்கள் இந்த ஆர்ப்பாட்டதை கண்டு கொள்ளவேயில்லை. ஒரு தமிழ் ஊடகம் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு ஆதரவான இந்த ஆர்ப்பாட்டத்தில் 1000 பேர் கலந்துகொள்ளவிருப்பதாக ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு முன்னமே செய்தி வெளியிட்டு அற்ப திருப்தியை பெற்றுக்கொண்டது.

இங்கு வேதனை என்னவென்றால் முஸ்லிம் வாசகர்களை அதிகமாக கொண்டுள்ள சில தமிழ் இணைய ஊடகங்கள் முஸ்லிம்கள் மேற்கொண்ட இந்த ஆர்ப்பாட்ட செய்தியை திட்டமிட்டே மறைத்துவிட்டன. ஆனால் எமது முஸ்லிம் சமூகத்தின் துரதிஷ்டம் என்னவென்றால் இந்த தமிழ் ஊடகங்களைத்தான் நம்மவர்கள் அதிகம் பார்ப்பது...!

இதில் மகா கொடுமை என்னவென்றால் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்ட இனவாத செய்திகளை பதிவிடும் தமிழ் இணையங்களுடைய பேஸ்புக் பக்கத்தை தமது முகங்களைக் கொண்டு அலங்கரிப்பவர்கள் முஸ்லிம்கள்தான். ஒரு தமிழ் இணைய ஊடக பேஸ்புக் பக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஒருவரை காணமுடிந்தது. இஸ்லாமிய கலாபீடமொன்றில் கற்றுத்தேர்ந்த அவரும் சிரித்துக்கொண்டே அந்த பேஸ்புக்கில் இடம்பெற்றிருந்தார்.

இவ்வளவுக்கும் அந்த தமிழ் ஊடகம்தான் வெளிநாட்டிலுள்ள தமிழர்களுக்கு நமது முஸ்லிம்கள் பற்றி தவறான தகவல்கள் வழங்குவதில் முதல் நிலையில் உள்ளது. முஸ்லிம்களை எப்போதுமே மோசமாக சித்திகரிப்பதிலும், போராளி இயக்கங்களை இஸ்லாமிய பங்கரவாதிகள் என்று அழைப்பதிலும் அந்த தமிழ் இணைய ஊடகத்திற்கு அவ்வளவு பிரியம்.

உண்மையில் இவ்வாறு பல சம்பவங்கள் உள்ளன. நமது முஸ்லிம் உறவுகள் ஏன் இவ்வளவுதூரம் இந்த தமிழ் இணைய ஊடகங்களுக்கு அடிமைப்பட்டு, முஸ்லிம்களுக்கு எதிராக அந்த தமிழ் ஊடகங்கள் வெளியிடும் செய்திகைள ஜீரணித்தவர்களாக எப்படி ஜடங்களாக இருக்கிறார்கள் என்பதை சிந்திக்கையில் கவலை மாத்திரம்தான் மிஞ்சிநிற்கிறது.

முஸ்லிம்களுக்கு எதிராக தமிழ் ஊடகங்கள் இவ்வாறு பாரபட்சம் காட்டுவது இது முதற்தடவையல்ல. இதற்கு முன்னரும் இவ்வாறு பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இருந்தபோதும் எமது கவலையெல்லாம் நமது முஸ்லிம்கள் பற்றித்தான் உள்ளது.

முஸ்லிம்கள் இந்த தமிழ் இணைய ஊடகங்களுடைய பேஸ்புக்கில் தலைகாட்டாமல் இருந்தாலே அதுவே நமது முஸ்லிம் சமூகுத்திற்கு செய்யும் பெரிய உபகாரமாக அமையும். தமிழ் இணைய ஊடகங்களை பார்க்க வேண்டாமென்று நாம் கூறவரவில்லை. மாற்றமாக அந்த தமிழ் இணைய ஊடகங்களின் பேஸ்புக் பக்கம் சென்று லைக் 'like' செய்யாதீர்கள் என்றுதான் நாம் கூறுகிறோம். இதனை சற்று ஆழமாக சிந்தித்துப் பாருங்கள் இதற்குள் பல நூறு அர்த்தங்கள் அடங்கியிருப்பதை ஒப்புக்கொள்வீர்கள்..!

சில முஸ்லிம் ஊடகவியலாளர்களிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட தகவலின் அடிப்படையின்படி தமிழ் ஊடகங்கள் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் பற்றிய செய்திகளை திட்டமிட்டே இருட்டடிப்புச் செய்துள்ளார்கள். தமிழ் ஊடகங்களில் பணியாற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் இதை உறுதிப்படுத்தியுமுள்ளனர்.

அந்தவகையில் தமிழ் இணைய ஊடகங்களுடைய பேஸ்புக் பக்கத்தில் லைக் 'like' செய்துள்ள நமது முஸ்லிம் உறவுகளே இனியாவது சிந்தித்து செயற்படுங்கள்..!

8 comments:

  1. நீங்கள் சொல்வது போல தமிழ் ஊடகங்களை முஸ்லிம்கள் அதிகம் நாடிச் செல்வது உண்மையாக இருக்கும். நீங்கள் எந்த தமிழ் இணைய ஊடகங்களை குறிப்பிடுகின்றீர்கள் என்று தெரியவில்லை. முஸ்லிம்கள், முஸ்லிம் இணைய ஊடகங்களில் ஆர்வம் காட்டாமல், தமிழ் இணைய ஊடகங்களை அதிகம் நாடிச் செல்ல அவற்றில் வரும் சினிமா செய்திகளும், அரை குறை ஆபாசப் படங்களும், கிளுகிளுப்பூட்டும் செய்திகளும் காரணமோ தெரியவில்லை.

    வாசகர்கள் வேண்டும் என்பதற்காக, முஸ்லிம் ஊடகங்கள் விபச்சாரி தரத்திற்கு தாழ்ந்து போக முடியாதே.

    அச்சு ஊடகத்தைக் கருதினாலும், நவமணியை விடவும், முஸ்லிம்கள் ஏனைய பத்திரிகளிகளை அதிகம் நாடக் காரணம், நவமணியில் கிளுகிளுப்பு இல்லாமை ஆக இருக்கலாம்.

    ReplyDelete
  2. முஸ்லிம்களின் ஆர்ப்பாட்டம் குறித்த செய்திகளை சிங்கள ஆங்கில ஊடகங்களுக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது,

    ReplyDelete
  3. ரோசம் கெட்ட முஸ்லிம் இளைஞ்சர்கள்,ஜுவதிகள் அதிகமாக பார்ப்பதும் ரசிப்பதும் முஸ்லிம் விரோத சக்திகளினது இணைய தளங்களையும்,பத்திரிகைகளையும்தான் இவர்களால் கையை கொண்டு தடுக்க முடியாவிட்டாலும் மனதளவிலாவது வெறுத்துவிட்டு போகலாம் அதை விடுத்து இவர்கள் அந்த ஊடகங்களின் facebook பகுதியை like பன்னுவதனூடாக அதனுடைய வாசகர்களின் எண்ணிக்கையை பார்த்து அவ்வூடகங்களுக்கு விளம்பரங்கள் குவிகின்றன.
    நானும் எத்தனையோ முறை இது போன்ற கருத்துகளை என்னால் முடியுமான அளவு பதிவு செய்து அறியாமையில் இருக்கும் நம் சமூக சகோதர சகோதரிகளை திருத்த பார்க்கலாம் என நினைக்கிறேன் முடியாமலே உள்ளது.
    என் அன்பான சகோதர சகோதரிகளே நீங்கள் நமது சமூகங்களின் வலைததலங்க்களை தவிர மற்ற பாசிச போக்குகொண்ட தமிழ் ஊடகங்களை உங்கள் facebook பகுதியில் இருந்தோ உங்கள் இணையத்தள வலை அமைப்பிளிருந்தோ அகற்றிவிடுங்கள். இது நீங்கள் நம் சமூகத்திற்காக செய்யும் மிக பெரும் சேவை.
    மன்னார் முஸ்லிம்களுக்காக நாடு பூராவும் நடந்த ஆர்பாட்டம் நீங்கள் like பன்ன்யுள்ள ஏதாவது ஒரு தமிழ் ஊடகத்திலாவது வந்திருக்கிறதா என்பதனை பாருங்கள்.
    ஏன் இந்த பாசிச வாதிகளின் ஊடகங்களை மீண்டும் மீண்டும் பார்க்கின்றீர்கள் நம்மவர்களின் ஊடகங்கள் எத்தனையோ இருக்கிறன அதை பாற்பதோடோ மட்டும் நின்று விடாமல் அதில் வருகிற ஆரோக்கியமான செய்திகளின் link ஐ உங்கள் facebook சுவர் பக்கங்களிலும்,இணையதள வலை பக்கங்களிலும் பதிவேற்றி மற்றவர்களையும் பார்க்கதூண்டுங்கள் நமது உம்மத்தினருக்கு நம்மால் முடிந்த இப்படி பட்ட நன்மையான காரியங்களியாவது செய்ய உங்களையும் என்னையும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக.
    அன்புடன்
    நல்லடியான்
    பொத்துவில்.

    ReplyDelete
  4. My dear brothers in Islam,
    please can you visit www.tamilmirror.lk this website dit not publish the mannar innocent muslims problems from the biggining why?..... we are the muslims.
    muslim people in mannar incident on the 18th,an other mask picketing last 27th friday in colombo.
    tamilmirror dos not like to publish our matter because the tamilmirror media institution feeling that still we are the animals not a human being. still the vannni lowyers picketing only the tamilmirror website. why? they are the Tmalil eelam declare community. still they are seeing dreams.
    will never get foolish intention.
    My dear brothers in Islam allah will never given up the "Mumins" and muslims "Dhua" therefore take care about this medias and such a number of peoples.
    "Kuffar" mean "Kuffar" they will never change the mind and not to help to us. do not believe them. Allah will help to us.
    because we are the believes. we have a permanent house of "Jannah" disbelieves permanently will be live in "Jahannam".therefore we no need to get any worries in this universal. if they publish or not our matters.
    "Jazakaalahu Haira".

    ReplyDelete
  5. இது நேற்று, இன்று நடைபெறும் ஒரு விடயமல்ல,அப்படியிருந்த போதும் எமது முஸ்லிம் சகோதரர்கள்தான் அவற்றுக்கு அதிகம் வாசகர்களாக இருக்கிறார்கள்.அந்த தைரியத்தினால்தான், அவைகளும் அவை இலத்திரனியல் ஊடகமாக இருந்தாலும் அச்சு ஊடகமாக இருந்தாலும் இணைய ஊடகமாக இருந்தாலும் எமக்கு எதிராகவே செயற்படுகின்றன.இது எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு விளங்காமல் இருப்பது துரதிஷ்டமே.

    ReplyDelete
  6. ஊடக இருட்டடிப்பு என்பது, தமிழ் ஊடகங்களுக்கு விசேடமாக புலன்கள் பெயர்ந்தவர்களின் ஊடகங்களுக்கு கைவந்த கலை.

    ௩௦ வருட காலமாக நச்சுக் கருத்துக்களைத்தான் அப்பாவித் தமிழ் மக்களின் மனங்களை தூவி வந்திருக்கின்றனர்.

    அதுகளும் என்ன செய்ய - அந்த நச்சுக் கருத்துக்களைப் பார்த்துப் பார்த்து, அவர்களின் உள்ளங்களும் உண்மை எதுவென்று அறியாமல் இருட்டில் இருக்கின்றனர்.

    ஏனைய இனங்களின்மேல் உள்ள காழ்ப்புணர்ச்சி, நிச்சயம் அழிவின்பால்தான் கொண்டுசெல்லும்.

    முள்ளிவாய்க்கால் சாட்சி.

    தமிழ் ஊடகங்களின் பாணியில் நாம் செல்லாமல், மார்க்க வரம்புகளுக்கு உட்பட்டு நமது ஊடகங்களை வழிநடத்த முயற்சிப்போம்.

    ReplyDelete
  7. Even they vomit a bit yesterday about Nyanmar? Burma that UN said some minority facing discrimination like this garsed upwards a small news.
    Who worship the stone then they beleive those are many saami kadavul same the innocent beleive all poisonus news.
    Living in Sri Lanka using Colombo as Port to arrive and use Sri Lankan currency beg for Medicines,foods,education,and oil and gas from Sri Lankan Government In Asylum countrie printing Banners as Tamil Elam many British said these are just culprit barbarian all the time distrubing us on the roads

    ReplyDelete
  8. அரசாங்கத்தில் பதிவியை பெற்றுக்கொண்டு முஸ்லீம் மக்களை குடியமர்த முடியவில்லை என்கிறீர்களே வெட்கம் இல்லையா?? உரிந்து போட்டு திரியலாமே.. எதை எடுத்தாலும் புலி என்று சொல்லி சிங்களவனை ஏமாத்தும் மகிந்த போல எப்பொழுது, முஸ்லீம் அரசியல் வாதிகள்..புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்று நினைக்காதிர்கள்

    ReplyDelete

Powered by Blogger.