Header Ads



பள்ளிவாசல்கள் நோன்பு கஞ்சி தயாரிக்க 3,800 தொன் அரிசி - ஜெயலலிதா அதிரடி

ரமலான் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக, பள்ளிவாசல்களுக்கு 3,800 டன் அரிசி வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் செய்திக்குறிப்பு: இஸ்லாமிய மக்கள் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளிவாசல்களுக்கு தேவையான அரிசிக்கான மொத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ரமலான் மாதத்தில், நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்கள் சிரமமின்றி அரிசி பெறுவதற்கு ஏதுவாக, மொத்த அனுமதி வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஆவணங்களை ஆய்வு செய்து, பள்ளிவாசல்களுக்கு தேவையான அரிசியை வழங்க, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலம் முழுவதும் 2,000க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு, 3,800 டன் அரிசி மொத்த அனுமதி மூலம் வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

Powered by Blogger.