Header Ads



விமான பயணியை தேள் கொட்டியது - விமானமும் அவரமாக தரையிறக்கம்

சென்னை விமான நிலையத்தில் இருந்து பக்ரைன் நாட்டுக்கு சல்ப் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று இரவு 10.30 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 218 பயணிகள் பயணம் செய்தனர்.

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த வித்யாசாகர் (35) என்ற பயணி திடீரென அலறினார். விமானப் பணி பெண்கள் பதறிப்போய் விசாரித்தனர். அதற்கு அவர், கோட்டுக்குள் கையை விட்டேன். ஏதே கடித்து விட்டது. கடுமையாக வலிக்கிறது என்று கூறி கதறினார்.

உடனே விமான பணிப்பெண்கள் உங்கள் கோட்டை கழற்றுங்கள் என்றனர். வித்யாசாகர் கோட்டை கழற்றி உதறினார். அதில் இருந்து பெரிய கருந்தேள் விழுந்தது. இதை பார்த்த விமானத்தின் மற்ற பயணிகள் அலறினர். இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதற்குள் சிலர் காலால் கருந்தேளை நசுக்கி கொன்றனர்.
கருந்தேள் கொட்டிய வித்யாசாகர் தொடர்ந்து கதறி துடித்ததால் அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து விமானம் இரவு 11.15 மணி அளவில் மீனாம்பாக்கம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

தேள் கொட்டிய வித்யாசாகர் இறக்கப்பட்டு விமான நிலைய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மற்ற பயணிகளுடன் இரவு 12.15 மணிக்கு விமானம் பக்ரைன் புறப்பட்டு சென்றது.

No comments

Powered by Blogger.