ஹமாஸ் தலைவருக்கு இஸ்ரேலில் ஆயுள் தண்டனை
ஹமாஸ் தலைவர் ஒருவருக்கு இஸ்ரெலிய ராணுவ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. பலஸ்தீன் விடுதலை போராட்டத்தின் போது 46 இஸ்ரேலியர்களை கொலைச் செய்ததாக குற்றம் சாட்டி ஹமாஸ் உறுப்பினரான இப்ராஹீம் ஹமதிற்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. 2006-ஆம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் வைத்து இஸ்ரேலிய போலீஸ் ஹமதை கைது செய்தது.
கடந்த அக்டோபர் மாதம் சிறைக்கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் ஹமதை விடுதலைச் செய்யவேண்டும் என ஹமாஸ் கோரிக்கை விடுத்தபோதும் இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை.

Post a Comment