Header Ads



"போருக்குப் பின்னரான அபிவிருத்தி' யாழ்.பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு

"போருக்குப் பின்னரான அபிவிருத்தி' என்னும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு எதிர்வரும் 20 ஆம், 21 ஆம் திகதிகளில் யாழ். பல்கலைகழத்தில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டுக்குப் பிரதம விருந்தினராக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவும், அதிதிப் பேச்சாளராக களனிப் பல்கலைக்கழகத்  துணைவேந்தர் பேராசிரியர் சரத்அமுனுகமவும் அழைக்கப்பட்டுள்ளனர். சிறப்பு விருந்தினராக இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த மாநாட்டின் பேச்சாளர்களாக இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன், நியூசிலாந்து, பின்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் பணிபுரியும் துறைசார் பேராசிரியர்கள், நிபுணர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரபல ஆய்வாளர்களை ஒன்றிணைத்து அவர்களது ஆய்வு அறிக்கைகளைப் பெறவும் அவர்களது திறமைகள் கருத்துக்கள், அனுபவங்கள், திட்டங்கள் மற்றும் அவர்களது ஆய்வு அறிக்கையின் முடிவுகளைப் பகிர்ந்து கொள்வது இந்த மாநாட்டின் நோக்கமென அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.