Header Ads



கொழும்பு மாவட்டம் முஸ்லிம்களின் இதயம் போன்றது - நசீர் அஹமட்

கொழும்பு மாவட்டம் முஸ்லிம்களின் இதயம் போன்றது. இங்கே  கட்சியை முன்னிருந்த நிலைமைக்கு நாம் பலப்படுத்த வேண்டும். கட்சியை பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே முஸ்லிம் மக்களின் உரிமைகளாகட்டும், கட்சி சார்ந்த தனி நபர்களின் அபிலாசைகளாகட்டும் எதுவானாலும் அவற்றை நிறைவேற்றி வைக்க முடியும் என்பதை கட்சியின் தொண்டர்களும், போராளிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பலப்படுத்தல் என்பதை கட்சித் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு செயற்படுத்துவதன் மூலம் மட்டுமே எம்மால் உறுதிப்படுத்த முடியும். இத்தகு நிலைப்பாட்டையே நாம் முன்னெடுக்கவேண்டுமென ஸ்ரீ.ல.மு.கா பிரதித் தலைவர் நசீர் அஹமட் தெரிவித்தார்.

கொழும்பு ஸ்லேவ் ஐலண்ட் டி.பி.ஜாயா ஸாஹிரா கல்லூரியில் நடைபெற்ற அர்ஷாட் பவுண்டேசனின் பத்தாண்டு நிறைவை முன்னிட்டு அதனால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மேல் மாகாணசபை உறுப்பினர் அர்ஷாடின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் திறந்து வைத்தார். இங்கு மேலும் உரையாற்றிய நசீர் அஹமட்,

கொழும்பு வாழ் முஸ்லிம்களில் இன்றும் கணிசமான மக்கள் அடிப்படை வசதிகள் இன்னும் சரிவர கிடைக்காத நிலைமைகளில் வாழ்கின்றனர். இவர்களது வாழ்வாதாரங்களை வளப்படுத்துவதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னின்று உழைக்க வேண்டும். வறிய மக்கள் தொடர்பில் இத்தகைய இலவச மருத்துவ முகாம் போன்ற பணியினை முன்னெடுக்கும் நமது மாகாணசபை உறுப்பினர் அர்ஷாட் போன்றவர்களின் பணி பாராட்டுக்குரியது.

இவர்கள் தொடர்ந்தும் கொழும்பு வாழ் முஸ்லிம் மக்களின் வறுமை நிலைகளை அகற்றுவதற்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதற்கான ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் வழங்க ஸ்ரீல.மு.கா தயாராக இருக்கிறது என்றும் அவர் கூறினார். 

1 comment:

  1. முதலில், கிழக்கு மண்ணில் எத்தனை மாவட்டகள் உழ்ழது என்பதை நீங்கள் கொழும்பு வாழ் முஸ்லிம் மக்களுக்கு கற்றுக்கொடுங்கள். அதன் பிறகு சகல விடயமும் அவர்களுக்கு சரிவரும். ஏனெனில், இன்றுவரைக்கும் இந்த முஸ்லிம்களின் இதயம் என்று வர்ணிக்கின்ற கொழும்பு மக்கள், இந்த கிழக்கு மக்கழை மட்டக்கழப்பான் என்று கொச்சையாக வர்நிப்பவர்கழாகவே இன்றும் உழ்ழார்களே தவிர, அந்த கிழக்கு மண்ணின் மகிமை, தன்மை பற்றி இன்னும் அறியா மடமைகழாகவே உள்ளனர். ஆக இவர்கள் இப்படி கர்வத்துடன் இருக்க, கொழும்பு முஸ்லிம்கள் அடிப்படை வசதி அற்றவர்கள் என்று நீங்கள் கவலை அடைவது மாதிரி அரசியல் லாபம் தேட வேண்டாம் ஐயா.....

    ReplyDelete

Powered by Blogger.