மின்னல் ரங்காவுக்கு பகிரங்க சவால்..!
கடந்த பொது தேர்தலில் நுவரெலிய மாவட்டத்திலிருந்து ஐ.தே.க பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட தனியார் தொலைகாட்சி ஊடகவியலாளரான ஸ்ரீரங்கா எம்.பி.யை, நடுநிலையான நடத்துனரின் பங்குபற்றலுடன் கூடிய நேரடி ஒளிபரப்பு தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் தம்முடன் கலந்துகொள்ள தயாரா? எனவும் அதில் அவரை கலந்து கொள்ளுமாறு கோரியும் ஜனநாயக மக்கள் முன்னணி பகிரங்க அழைப்பொன்றை விடுத்துள்ளது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பாக கட்சியின் ஊடக செயலாளர் எஸ். பாஸ்கரா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஸ்ரீரங்கா எம்.பி.யுடன் கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட கடிதமொன்றும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஒரே சமயத்தில் அரசியல்வாதியாகவும், ஊடகவியலாளராகவும் இருந்துகொண்டு நீங்கள் தனியார் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் அரசியல் விவாத நிகழ்ச்சியை நடத்துகிறீர்கள். உண்மையில் உங்களது நிகழ்ச்சியை நடத்தும் தனியார் தொலைக்காட்சி நிறுவனமும், அந்த தொலைக்காட்சி மற்றும் பண்பலை அலைவரிசைகள், இந்நாட்டு தமிழ் பேசும் மக்களால் பெரிதும் மதிக்கப்படுகின்றன.
இந்த நிறுவனத்தின் தலைவர், நிர்வாகத்தினர், திறமைமிக்க இளம் மற்றும் அனுபவமிக்க நிகழ்ச்சி மற்றும் செய்தி தயாரிப்பாளர்கள், அறிவிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோர் தொடர்பில் நாம் நன்மதிப்பு கொண்டுள்ளோம். குறித்த தொலைக்காட்சி, பண்பலை அலைவரிசைகளுடன் எமக்கு எந்த விதமான பிரச்சினையும் கிடையாது.
ஆனால், ஊடக தர்ம நியாயங்களையும் மீறி நீங்கள் தன்னிச்சையாக நடத்துகின்ற, அரசியல் விவாத நிகழ்ச்சியே எமதும், இந்நாட்டு தமிழ் பேசும் மக்களினதும் கடும் அதிருப்திகளை சந்தித்துள்ளது.
நீங்களே கேள்விகளையும் கேட்டு, அதற்கான பதில்களையும் நீங்களே வழங்கி, நீங்களே அதிகம் உரையாடும் போக்கில் உங்களது நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது. உங்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படும் பிரபல தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள், முன்னணி தமிழ் ஊடகவியலாளர்கள், தொண்டு நிறுவன செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உங்களது நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இல்லை.
பதிலளிப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் இல்லாத சந்தர்ப்பங்களில், அவர்களை கடும் சொற்களால் தனிப்பட்ட ரீதியாக விமர்சனம் செய்கிறீர்கள். அதேவேளையில் உம்முடன் இசைந்து செல்லும் ஒருசிலருக்கு நற்சான்றிதழ் வழங்குகிறீர். இவை ஊடக நியாயங்களை கடுமையாக மீறும் செயலாகும்.
ஆகவே நடுநிலையாளர் முன்னிலையில் நடத்தப்படக்கூடியதாக இந்த பகிரங்க நேரடி விவாதத்திற்கு வரும்படி உங்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம். உங்களது பதிலின் பின்னர் உங்களுடன் எமது கட்சியின் சார்பாக விவாதிக்கும் பிரதிநிதியை நமது கட்சி நியமிக்கும்.
உங்களுக்கு வாக்களித்து உங்களை தெரிவு செய்த நுவரெலியா மாவட்ட வாக்காளர்கள் மத்தியிலிருந்து உங்களிடம் கேள்வி கேட்பதற்கு ஆயிரக் கணக்கானோர் காத்திருக்கின்றனர். அவர்களது கேள்விகளையும், பின்வரும் நமது கேள்விகளையும் நாம் இந்த உத்தேச அரசியல் விவாதத்தில் உங்களிடம் எழுப்ப உள்ளோம். ஊடக நாகரீகத்தின் அடிப்படையில் உங்கள் நன்மையை கருதி எமது முக்கியமான சில கேள்விகள் உங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுகின்றன.
நீங்கள் தற்போது ஆளும் கட்சி எம்.பி.யா? அல்லது எதிர்க்கட்சி எம்.பி.யா? உங்களது கட்சியென சொல்லிக்கொள்ளும் பிரஜைகள் முன்னணியின் தலைவர், செயலாளர் மற்றும் அரசியல் குழு, மத்தியக்குழு அங்கத்தவர்கள் யார்? உங்களது கட்சியின் தலைமை அலுவலகம் எங்கே உள்ளது? உங்களது கட்சியின் ஸ்தாபகர் யார்? நீங்கள் எப்போது கட்சியின் அங்கத்தவத்தை பெற்றீர்கள்? நுவரெலிய மாவட்ட எம்.பி.யான உங்களுக்கு நுவரெலிய மாவட்டத்தில் அலுவலகங்கள் இருக்கின்றனவா? இருப்பின் அவற்றின் விலாசங்கள் என்ன? உங்களது கட்சிக்கு தொழிற்சங்க பிரிவு இருக்கின்றதா? இருப்பின் மலையகத்தில் இருக்கின்ற தொழிற்சங்க கிளை அலுவலகங்களின் விலாசங்கள் என்ன?
கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், இ.தொ.கா, தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி மற்றும் எமது கட்சி ஆகிய தமிழ்பேசும் மக்களின் அரசியல் கட்சிகளை பலவீனப்படுத்தி, சிதறடிக்க வேண்டுமென உங்களுக்கு எவராவது அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்களா? கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தல்களில், நுவரெலிய மாவட்ட எம்.பி.யான உங்களது கட்சி ஏன் நுவரெலிய மாவட்டத்தில் போட்டியிடவில்லை?
உங்களது கட்சி எந்த அடிப்படையில் வட மாகாண உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிட்டது? வடக்கில் உங்களது கட்சி போட்டியிட்ட குறிப்பிட்ட பிரதேச சபை தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஏன் போட்டியிடவில்லை? வடக்கில் உங்களது கட்சி பெற்ற ஒட்டு மொத்த வாக்கு தொகை என்ன? 18ஆம் திருத்தத்திற்கு நீங்கள் ஆதரவாகவா அல்லது எதிர்த்தா வாக்களித்தீர்? 2010ஆம் வருடம் சித்திரை மாதம் தெரிவு செய்யப்பட்ட இந்த நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி, எதிர்கட்சி ஆகியவை தொடர்பில் இதுவரையில் எந்தெந்த சட்டமூலங்களுக்கு எவ்விதமாக வாக்களித்துள்ளீர்?
நீங்கள் அரசாங்க தூதுக்குழுவில், எத்தனைமுறை வெளிநாடுகளுக்கு சென்றுள்ளீரகள் இலங்கையில் போர் முடிந்தவுடன் ஐ.நா செயலாளர் நாயகத்தை சந்திப்பதற்கு முதன் முறையாக நியூயோர்க் சென்ற ஜனாதிபதி தூதுக்குழுவில் நீங்கள் எந்த அடிப்படையில் இடம்பெற்றீர்கள்?
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையிலான, 'தாருன்யட ஹெட' என்ற அமைப்பில் நீங்கள் வகிக்கும் பதவி என்ன? நீங்கள் தற்சமயம் சொந்த வீட்டிலா அல்லது வாடகை வீட்டிலா வசிக்கிறீர்கள்? நீங்கள் பயன்படுத்தும் ஜீப் வாகனம் அரசாங்க அமைச்சு ஒன்றின் பெயரில் பதிவு செய்யப்பட்டதா?
2011ஆம் வருடம் மார்ச் மாதம் 30ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு வவுனியா செட்டிக்குளத்தில் இடம்பெற்ற உங்களது வாகன விபத்தில் பலியான 36759 என்ற இலக்கம் கொண்ட ஜெயமினி உதய புஷ்பகுமார என்ற பொலிஸ் சார்ஜன்டின் மரணம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டதா? உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்படவுள்ளன' என்று அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலைக்கி தண்ணீரில்தான் பலம்??? அதைவிடுத்து அது வருமா???ரங்காதான் மின்னலை விட்டு பொது மேடைக்கி வர்வாரா???
ReplyDeleteஎத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே,
ReplyDeleteஇன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே,
சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்,
பகல் வேசம் காட்டி பாமர மக்களை வலையினில் மாட்டி....
ரங்காவை நம்பி மின்னல் பார்த்ததும், பங்கு பற்றியதும் போதும் முஸ்லிம்களே. இனியும் வேண்டாம் இந்த மின்னல். அது வெறும் மின்னல் அல்ல, முஸ்லிம் சமூகத்தின் தலையில் விழும் இடி.
The Anchor of Minnal program Mr.Ranga had been a hypocrite journalist from the day one. Even before he entered into the politics, People knew that he was bought by the government yet he was pretending as if he was against the government. I still can remember once a flight with the president and number of ministers along with a lot of government officials were travelling to a destination was delayed by half an hour to accommodate him. Believe me he entered the flight through the VIP channel. May be the first time in the history of Srilanka just a journalist was permitted through the VIP launch.
ReplyDeleteHe was nothing other than a journalist at that time, but during the period he was criticizing the government heavily to show the people that he was an anti government.
Most of the time he calls his own colleges to the program, people like of Rathakrishnan, myown Musthafa, Mano Ganesan (At that time he was so closed to him), and Nijamudeen....etc to mud the others.
Otherwise he calls a couple of oppositional members and creates havoc between them and thinks that he has done a wonderful job.The best example was the fight between Late Noordeen Masoor and Risath Badurdeen.This journalist does not even know the ethics of journalism. He used the program to open a path for him to enter the politics and now he is using the program to retain his seat.
I guess he must have been asked to join the opposition to be a spy of the government.
ரங்கா சொல்லிக்க் கொடுப்பதை நமது முஸ்லிம் அரசியல் வாதிகள் கிளிப் பிள்ளை போல் மீட்டுவதர்க்கு ஏன் அந்த இடி மின்னல் நிகழ்ச்சிக்கு வேட்கம் கேட்டு போகிரார்கள் என்று தெரியவில்லை.
ReplyDeleteதன் பாராளு மன்ற கனவை மின்னல் மூலம் நவாக்கிக்கொண்ட இந்த ரங்கா முஸ்லிம் சமூகம் அதன் பிரட்சனைகள் பற்றி அவர் நினைத்த எல்லாம் பேசு வாதர்ர்க்கு யார் அனுமதி கொடுத்தார்கள் .தயவு செய்யது முதுகு எலும்ம்பு உள்ள அரசியல் வாதிகள் இங்கவை அவர் சொந்த வீட்டின் விவாத அறையில் இருந்து வெளியில் எடுத்து கொஞ்சம் விவாதம் ,அரசியல் எப்படி நடத்துவது என்று சொல்லிக் கொடுங்கள்.நாம் என்ன ரங்கா மின்னலில் சொல்லும் எல்லாம் கேட்டுக் கொண்டு சும்மா இருக்க மடையர்களா? தயவு செய்து சக்தி தொலைக் காட்சி இந்த ரங்கவை நிறுத்திவிட்டு சுயாதீனமான ஒருவரை நியமிக்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம்