Header Ads



றிசாத் பதியுதீனுக்கு எதிராக யாழ், கிளிநொச்சி சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

மன்னார் நீதிமன்றத்தின் மீதான தாக்குதல் மற்றும் மன்னார் நீதவானை அமைச்சர் ரிசாத் பதியுதீன் அச்சுறுத்திய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று வெள்ளிக்கிழமை யாழ். நீதிமன்ற சட்டத்தரணிகள் ஒன்று திரண்டு அமைச்சர் ரிஷாத்துக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இன்று காலை 11 மணியளவில் யாழ். நீதிமன்றின் முன்னால் ஒன்று கூடிய சட்டத்தரணிகள், அமைச்சர் ரிஷாத்துக்கு எதிராக எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியும், கோஷங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன்போது நீதிமன்றப் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
 
மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதலை கண்டித்து இன்று கிளிநொச்சியில் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் நீதி மன்ற பணியாளர்கள் நீதி மன்ற செயற்பாடுகளை பகிஸ்கரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்னா.

நீதிமன்றுக்கு முன்பாக ஏ9 பிரதான வீதியினை மறித்து மேற்கொள்ளப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது தாக்காதே தாக்காதே நீதிமன்றத்தை தாக்கதே, கைது செய் கைது செய் றீசாட்டை கைது செய்,  நீதிக்கே சவாலா?, இன்று மன்னார் நாளை? போன்ற பதாததைகளை தாங்யிருந்ததோடு கோசங்களை எழுப்பிய வண்ணம் நீண்ட நேரம் ஏ9 வீதியினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை நேற்று அமைச்சர் றிசாத் பிபிசி க்கு வழங்கிய செவ்வியொன்றில் தான் ஒருபோதும் மன்னார் நீதிபதிக்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்கவில்லையென கூறியிருந்தமை இங்கு குறிப்பிட்டத்தக்கது.



 

1 comment:

  1. தாக்கு தாக்கு, அநீதிமன்றத்தை தாக்கு.....
    கைது செய், கைதுசெய், அநீதிபதியை கைது செய்....
    அநீதிக்கு சவால்தான்.. தெரிந்துகொள்.
    இல்லாவிட்டால் இன்று மன்னார், நாளை காத்தான்குடி, பின்னர் கண்டி....

    ReplyDelete

Powered by Blogger.