யாழ்ப்பாணத்தில் பட்டதாரிகளுக்கு நியமனம் (படங்கள் இணைப்பு)
யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 2048 பட்டதாரிகளுக்கு இன்றையதினம் நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்த நியமனங்கள் உரிய வகையில் பயன்படுத்தப்பட வேண்டுமென்பதே எனதும் எமது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
இந் நியமனங்கள் எமது அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றன. இவற்றில் எந்தவிதமான முறைகேடுகளுக்கும் இடமளிக்கக்கூடாது.
2004ம் வருடத்தில் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனங்களை விடவும் இந்த வருடத்தில் நாடளாவிய ரீதியில் அதிகமான பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக விகிதாசார அடிப்படையின்றி யாழ் மாவட்டத்தில் அதிகளவிலான பட்டதாரிகளுக்கு இன்று நியமனங்கள் வழங்கப்படுகின்றன. அதையிட்டு நானும் பட்டதாரிகளாகிய நீங்களும் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.
இந்த நியமனங்களை பெறுவதற்காக பட்டதாரிகளாகிய நீங்கள் எவருக்கேனும் இலஞ்சம் அல்லது கப்பம் அல்லது வேறெந்த வகையிலாவது ஏதாவது நிதியை கொடுத்திருப்பீர்களாயின் அது எனக்கும் எமது அரசாங்கத்திற்கும் செய்கின்ற இழுக்கு என்றே கருதப்படவேண்டும்.
எனவே எதையாவது மேற்குறிப்பிட்ட வகையில் நீங்கள் எவராவது கேட்கப்பட்டு செய்திருப்பீர்களேயானால் அல்லது செய்ய வேண்டிய நிலைமையில் இருப்பீர்களாயின் அது குறித்து என்னிடமோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிலோ முறைப்பாடு செய்ய வேண்டுமென வலியுறுத்தி நான் கேட்டுக் கொள்கின்றேன்.
இந்த அரசாங்கத்தினுடைய பிரதிநிதியாக நானே இருக்கின்றேன். இதை ஜனாதிபதி அவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார் என அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். (அமைச்சர் அவர்களுடைய முழுமையான உரை நாளை வெளியிடப்படும்) இந் நிகழ்வு யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்றது.

Post a Comment