அமைச்சர் ரவூப் ஹக்கீமின் மன்னார் விஜயம் (படங்கள் இணைப்பு)
தகவல் உதவி - டாக்டர் ஹபீஸ்
நீதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், மன்னார் உப்புக்குளம் ஜும்மா பள்ளிவாசலில் சனிக்கிழமை, 28 ஆம் திகதி விஜயமொன்றை மேற்கொண்டார்.
மன்னாரில் நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் அண்மையில் நடந்த சம்பவம் தொடர்பில் நிலைமையை நேரில் அவதானிப்பதற்காக அமைச்சர் அங்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். நீதிமன்றத்தின் முன் வழக்கு உள்ள சந்தர்ப்பத்தில் மன்னார் நீதி மன்றத்துக்கு செல்வது அவர் தவிர்த்துக் கொண்டார்.
உப்புக்குளம் பள்ளிவாசலில் அதன் தலைவர் ஆலம் ஜேபி, மீன்பிடி சமாஜத்தின் தலைவர் அலாம் ஆகியோரும் கருத்துக்களை தெரிவித்தனர். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிபாபா பாரூக், சட்டத்தரணி என்.எம். சபூர்தீன் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயிர்பீட உறுப்பினர்கள் சிலரும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

கைது செய்யப்பட்டோரில் தாய்மாரும், ஏனைய உறவினர்களும் பள்ளிவாசலில் வைத்து அமைச்சரை சந்தித்து அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். அவர்களுக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார்.
பின்னர் அமைச்சர் ஹக்கீமும் குழுவினரும் சர்ச்சையை தோற்றுவித்த கோந்தபிட்டி இறங்குதுறைக்கு சென்று நேரில் பார்வையிட்டனர்.

You cant do anything with out Rauff Hakeem Sir
ReplyDeleteNantri Amaichar avarkale
ReplyDeleteThayavu seithu mannaril paathikkappatta em sakothararkalukku uthavi seiyungal. inraya nilamaiyil muslim samookam sattikkul irunthu aduppitkullum aduppil irinthu sattikkulum vilum nilaithan allah thaan paathu kaakka veandum
ரவுப் ஹக்கீம் இந்த மக்களுக்காக ஏதாவது செய்கின்றாரா என்பது இன்னும் இரண்டொரு நாட்களில் தெளிவாகி விடும்.
ReplyDeleteஅப்பொழுது புரியும் இவர் எதற்காக மன்னாருக்குப் போனார் என்பது, இன்ஷா அல்லாஹ்.