Header Ads



உப்புக்குளம் முஸ்லிம்களுக்கு உடனடி தீர்வை பெற்றுக்கொடுங்கள் - மஹிந்தவிற்கு கடிதம்

மன்னார் உப்புக்குளம் மீனவர் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைப் பெற்றுத்தருமாறு இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் அவ் அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதமொன்றையும் அனுப்பியுள்ளது.

குறித்த பிரச்சினையானது மன்னாரில் பதற்றநிலையை உருவாக்கியுள்ளதோடு நீதிமன்றத்தினைத் தாக்கும் நிலைக்குச் சென்றுள்ளதாக இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

அதில் காலந்தாழ்த்தாது கூடிய விரைவில் உப்புக்குளம் முஸ்லிம் மீனவர்களுக்குத் தீர்வொன்றினைப் பெற்றுத்தருமாறு அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.  V

No comments

Powered by Blogger.