குறுநில மன்னன் அதாவுல்லாவிடம் ஹக்கீம் தோற்றுப்போனார் - முபாரக் மௌலவி
குறுநில மன்னரான அதாவுல்லாவிடம் தோற்றுப்போன ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்னமும் அமைச்சுப்பதவியில் ஒட்டியிருப்பது வெட்கங்கெட்ட செயலகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அம்பாரை மாவட்டத்துக்கான தமது கட்சி வேட்பாளர் பட்டியலை ஒப்படைத்த பின்னரான ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
முஸ்லிம் சமூகம் தனது சமயத்துக்கும் இருப்புக்கும் பாரிய அச்சுறுத்தல்களை எதிர் நோக்கியுள்ள இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூக நலனை முன்வைத்து அரசுடன் முரண்பட்டு மு. கா தனித்து தேர்தலில் போட்டியிட்டிருந்தால் அதனை நாம் வரவேற்கலாம். ஆனால் வேட்பாளர் பட்டியலுக்காக மு. கா முரண்பட்டு தனித்து போட்டியிடுகிறது என்றால் இக்கட்சி சமூகத்துக்கான கட்சியா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
அதுவும் ஒரு பிரதேசத்தில் மட்டும் செல்வாக்குள்ள அதாவுள்ளாவின் முன்பாக முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குப்பலம் கொண்ட தேசிய கட்சி என கூறிக்கொள்ளும் மு. காவின் தலைமை தோற்றுப்போயுள்ளது என்பது பரிதாபமானது. இந்த அரசாங்கத்தில் அதாவுள்ளா, ரிசாத் பதியுதீனை விட ஹக்கீமுக்கே மதிப்பு அதிகம் என பெருமையாக கூறி தம்மையும் மக்களையும் ஏமாற்றிக்கொண்டிருந்த மு. காவினருக்கு இதன் மூலம் பாரிய தலை குணிவு ஏற்பட்டுள்ளது.
இத்தகைய அவமானப்படுத்தலுக்கு பிறகும் ஹக்கீம் ஏதோ ஒன்றில் ஒட்டிய ஈ போன்று அமைச்சரவையில் ஒட்டியிருப்பது சமூகத்துக்கும் பாரிய தலைகுணிவாகும். இதனையும் சமாளிக்கும் வகையில் ஹக்கீம் அரசிலிருந்து விலகினால் சில மு. கா எம்பீக்கள் அரசில் ஒட்டிக்கொள்வார்கள் என பயப்படுவதாக இவர்கள் சொல்வதன் மூலம் இவர்களின் கட்சிக்கு அடித்தளமாக மக்கள் இல்லை என்பதையும் சில தனிநபர்களும் அமைச்சுப்பதவிகளும்தான் கட்சியை தாங்கிக்கொண்டிருக்கின்றன என்று ஈவர்கள் ஏற்றுக்கொள்வதாக அர்த்தமாகும். அவ்வாறெனில் அதாவுல்ல, ரிசாட், பாயிஸ் போன்றோர் மு. காவிலிருந்து பிரிந்து அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்ட போது இவர்கள் எவ்வளவு துரோகமிழைத்தாலும் மக்கள் எம்மோடு இருக்கிறார்கள் என இவர்கள் பேசிய வார்த்தையில் இவர்களுக்கே இன்று நம்பிக்கை இல்லை என்பதுதான் தெளிவாகின்றது.
எம்மைப்பொறுத்தவiர் தம்புள்ள தொடக்கம் தெஹிவலை வரையான பேரினவாத அத்துமீறல்களை முஸ்லிம் சமூகம் எதிர்க்கிறது என்ற செய்தியை இந்தத்தேர்தல் மூலம் நாம் ஜனநாயக முறைப்படி சொல்ல வேண்டுமாயின் வெற்றிலைக்கு அல்லது அரசாங்கத்தில் ஒட்டியிருக்கும் மு. காவின் மரத்துக்கு வாக்களிப்பதன் மூலம் ஒரு போதும் முடியாது.
மாறாக நமது வாக்குகளை எதிர் கட்சியான ஐ தே கவுக்கு அளிப்பதன் மூலமே முஸ்லிம்களின் வாக்குகள் ஏன் திசை திரும்பின என்ற பலத்த கேள்வியை தோற்றுவித்து இனியும் பள்ளிவாயல்கள் மீது கை வைக்கும் நிலையை கட்டுப்படுத்த முடியும். ஐ தே கவுக்கு வாக்களிக்க முடியாது என எவராவது பிடிவாதம் பிடித்தால் அவர் எமது முஸ்லிம் கட்சிக்கு வாக்களிக்கலாம் என்ற செய்தியை சமூகத்துக்கு சொல்லி வைக்கிறோம்.
olamahula kadsi
ReplyDeleteஉலமா தலைவர இருக்கும் நீங்கா இந்த புனித ரமலான் மாதததில் இப்படி எடகுடாம பேசி இருகிங்கா உங்களுக்கு எவன் குடுத்தான் இந்த உலமா சபை தலைவர் பதவியா அதாஉல்லாவின் அடவிடி தனத்த விட எங்கள் முஸ்லிம் காங்கிரஸ் ஒன்னும் தோத்து போகல சும்மா அடுத்தவங்கள நோன்பு காலத்தில் பேசாம மக்களுக்கு கதிஷா சொல்லுங்கா மௌலவி ஏறாவூர் ல இருந்து ரஹீம் முஸ்லிம் காங்கிரஸ் போராளி
ReplyDeleteஅல்லாஹ்விற்காக தொப்பியை கழற்றிவிட்டு உங்கள் அறிவிலி கருத்துக்களை வெளியிடுங்கள்....
ReplyDeleteமற்றைய சமூகம் பார்த்தல் நமது தொப்பிக்கு அவமானம் ஏற்படும்... நீங்கள் உண்மையான சமூக அக்கறை கொண்டவராக இருந்திருந்தால் இவ்வாறு மூளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாத கருத்துக்களை வெளியிடமாடீர்கள்.
யா அல்லாஹ் அதாவுல்லாஹ்வை கொண்டு Rauff Hakeem மின் சிந்தனையை தூண்டியவனே! இவரின் வாக்கினையும் SLMC இற்கு அளிக்ககக்கூடிய சிந்தனையினை இவருக்கு ஊட்டுவாயாக.... ஆமீன்.
இந்த வெட்கம் கெட்ட செய்திய உங்க அதாவுல்லஆவுக்கு
ReplyDeleteசொல்லுங்க!!
யார் யாரோட ஒட்டிக்குது இருக்காங்க என்று மக்கள் விரைவில் அடையாளம் கண்டு சமுகத்தில் மானம் மரியாதை யாருக்கு இருக்கெண்டு உங்களை போன்ற தரம்
கெட்ட உலமாக்கள் புரிந்து கொள்ளட்டும்!!!!!
முதலில் மஹிந்தவின் ஆஸ்தான மதகுரு போல செயல்பட்டார். அடிக்கடி மு.கா.வை விமர்சிப்பது இவரது ஹொபி. இப்போது ஐ.தே.க.விற்கு ஆதரவு. சத்தியராஜ் ஸ்டைலில் சொல்வதானால் மவுலவியின் கெரெக்டரை புரிஞ்சிகொள்ளவே முடியாது.
ReplyDeleteஹதீத் சொல்வதற்கு இந்த நாட்டில் ஐயாயிரம் மௌலவிமார் உண்டு. ஆனால் சமுதாயத்துக்கான அரசியல் செய்வதற்கு முபாறக் மௌலவி மட்டுமே உண்டு. அவர் தனது சொந்த நலன் பாராது தனது சமுதாயத்துக்காக பேசுகின்றார். சுய நலன் இருக்குமாயின் மு. காவினர் அரசோடு ஒட்டி செல்வதற்கு துடிக்கின்ற நிலையில் அவர் அரசை விட்டு ஆட்சியமைக்க முடியாத ஐ தே க வை ஆதரிப்பாரா? சுpங்கள பேரினவாதத்தின் முஸ்லிம் விரோத போக்கை சகிக்காமல் அவர் தனது எதிர்ப்பைக்காட்ட ஐ தே க வை ஆதரித்துள்ளார். இதுதான் சரியான அரசியல் வழிகாட்டல். ஓவ்வொரு முஸ்லிமும் அவர் போல் சிந்தித்தால் சமூகத்தின் கௌரவத்தை காக்கலாம்.
ReplyDelete