Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டி - ''பெரிதாகத் தூக்குப் பிடிக்கும் விடயமல்ல''

TN

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளமை அரசாங்கத்துடன் புரிந்துணர்வு அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானமாகுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொறுப்பாளரும் அமைச்சருமான டளஸ் அழகப்பெரும கூறினார்.

மு.கா. எங்களது எதிராளிக் கட்சியல்ல எனக்கூறிய அமைச்சர் டளஸ், பலதரப்பு சுற்றுப் பேச்சுவார்த்தைகளையடுத்து புரிந்துணர்வின் அடிப்படையிலேயே எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இரு கட்சிகளிடையிலும் சிறந்த புரிந்துணர்வு உள்ள நிலையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதேயன்றி, கட்சிகளுக்கு இடையிலான உட்பூசல்கள் எதுவும் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார். “இது ஒரு பெரிதாகத் தூக்குப் பிடிக்கும் விடயமல்ல” என்றும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.