Header Ads



மன்னாரில் பதற்றம் தணிந்தது - உப்புக்குளம் முஸ்லிம்களுக்கு நீதி கிட்டுமா..?

மன்னாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா

மன்னார் உப்புக்குளம் முஸ்லிம் மீனவ சமூகத்திற்கு சொந்தமான கோந்தபிட்டி மீனவ வாடிகளை விடத்தல்தீவு மீனவர்கள் பலாத்காரமாக பிடித்து வைத்துள்ளதையடுத்து புதன்கிழமை மன்னாரில் எற்பட்ட பதற்றத்தை தடுக்கும் வகையில் அகில இலங்கை மக்கள் காங்ஙகிரஸின் தேசிய தலைவரும், வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் விசேட விமானம் மூலம் மன்னாருக்க சென்று நிலைமையினை வழமைக்கு கொண்டுவந்துள்ளார்.

நேற்று புதன்கிழமை மாலை அமைச்சர் றிசாத் பதியுதீனுடன்.பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றிஸ்வான் ஹமீம் ஆகியோர் இந்த விமானம் மூலம் மாலை 3.00 மணியளவில் மன்னாரை சென்றடைந்ததுடன் பதற்ற நிலை காணப்பட்ட மன்னார் உப்புக்குளம் பிரதேசத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

பின்னர் மன்னார் அரசாங்க அதிபர் சரத் ரவிந்திர தலைமையில் அரச அதிபர் பணிமனையில் இடம் பெற்ற கூட்டத்தில் அமைச்சர் ,பாராளுமன்ற உறுப்பினர், பிரதேச செயலாளர்கள். இரானுவம். கடற்படை, பொலீஸ் மற்றும் அரச அதிகாரிகள்.மன்னார் குரு முதல்வர்,முசலி பிரதேச சபை தலைவர் எஹியான், பிரதி தலைவர் பைரூஸ்,மன்னார் நகர சபை உறுப்பினர் நவ்சீம்.மீனவ சமாச தலைவர் ஜெஸ்டின்,மன்னார் மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனத் தலைவரும்.வடமாகாண மஜ்லிசுல் சூறா அமைப்பின் தலைவருமான மௌலவி முபாறக் (றசாதி) உட்பட பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இப்பிரச்சினையினை தீர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதுடன்.மன்னார் மறை மாவட்ட ஆயர் இறாயப்பு ஜோசப் அவர்களை சந்தித்து கலந்துரையாடவென குழுவொன்றும் இதன் போது நியமிக்கப்பட்டது.

அதே வேளை நேற்று மன்னார் நகரில் இடம் பெற்ற சில அசம்பாவித சம்பவங்களால் நகரில் பதற்றம் காணப்பட்டதுடன்,சில விரும்பத்தகாத சம்பவங்களும் இடம் பெற்றதுடன்,அதன் போது பலர் தாக்குதலுக்குள்ளாகிp வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் வீடுகளுக்க சென்றதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மன்னார் பகுதயில் காணப்பட்ட பதற்றம் இன்று வியாழக்கிழமை காலை தனிந்துள்ள நிலையில்,வழமையான செயற்பாடுகள் மீள இடம் பெறுவதை காணமுடிந்தது. நகரத்தில் ஆயுதம் தரித்த பாதுகாப்பு படையினர்; பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போதும்.மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுப்பதில் எவ்வித இடைஞ்சல்களும் எற்படாது என அமைச்சர் றிசாத் பதியுதீன்; உப்புக்குளம் பள்ளிவாசலில் வைத்து மக்களுக்கு அளித்த உறுதியினையடுத்து மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பியதை காணமுடிந்தது.
அதே வேளை இன்று வியாழக்கிழமை காலை மற்றுமொரு கூட்டம் அமைச்சர் றிசாத் பதியுதீன்  தலைமையில் மன்னாரில் இடம் பெறவுள்ளது.



No comments

Powered by Blogger.