சமூக, கலாசார சீரழிவுக்கு அந்தந்த சமூகங்களே பொறுப்பு - சந்திரகுமார் எம்.பி.
தற்போது காணப்படுகின்ற சமூக மற்றும் கலாச்சார சீரழிவுகளுக்கு அந்தந்த சமூகங்களும் பொறுப்பேற்க வேண்டும். இதனை வெறுமனே சட்டத்தின் மீது மட்டும் பழிசுமத்தி விட முடியாது என ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தொவித்துள்ளார்.
இன்றையதினம் (10) யாழ்ப்பாணம் உடுவில் முருகமூர்த்தி வித்தியாலயத்தில் இடம்பெற்ற மல்வம் பிரதேச மக்கள் சந்திப்பு நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் ஒரு இறுக்கமான கட்டுப்பாட்டுச் சூழலுக்குள் வாழ்ந்த எமது சமூகம் குறிப்பாக இளம் சமூகத்தினர் தற்போது அதிலிருந்து விடுபட்டு அதிக சுதந்திரமாக வாழ்கின்றனர். யுத்தத்திற்கு பின்னராக ஏற்பட்டுள்ள இந்த சூழலை குறித்த சில இளம் சமூகத்தினர் தவறாக பயன்படுத்துகின்றனர். இது பல்வேறு சமூக மற்றும் கலாச்சார சீரழிவுக்கு இட்டுச்செல்கிறது. பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், போதைப் பொருள், மதுபான பாவனைகள் என பல்வேறு சமூக விரோதச் செயல்கள் தொடர்பில் நாளாந்தம் கிடைக்கின்ற தகவல்கள் எமது எதிர்கால சமூகம் தொடர்பில் கவலையடையச் செய்கிறது.
எனவே இவ்வாறான நிலைமைகளை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. அத்தோடு இதனை வெறுமனே சட்டங்களால் மட்டும் கட்டுப்படுத்தி விடவும் முடியாது. எனவே தான் இவைகள் தொடர்பில் அந்தந்த சமூகங்களும் தங்களுடைய தார்மீக சமூகப் பொறுப்பாக உணர்ந்து செயற்பட வேண்டும். சமூகத்தில் இருந்து கிடைக்கின்ற அதிக பட்ச ஒத்துழைப்பும் சட்டத்தின் உதவியின் மூலமே சமூக விரோதச் செயல்களை பெருமளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்றார்.

உடுவில் முருகமூர்த்தி வித்தியாலய அதிபர் தேவதயாளன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வலி வடக்கு பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி வடக்கு தெற்கு அமைப்பாளருமான இ.ஜெயபாலசிங்கம் (அன்பு), பிரதேச சபை உறுப்பினர்களான தேவராஜன், அரிகரன், இராஜசேகரம் சுன்னாக பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ.பி. நிஷாந்த வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச அமைப்பாளருமான பாலகிருஸ்னன் (ஜீவன்) மல்வம் பிரதேச கிராம முன்னேற்றச் சங்கத் தலைவர் மாணிக்கவாசகர் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment