Header Ads



காற்சட்டையில் வைத்திருந்த கையடக்க தொலைபேசி தீபிடித்தது - இலங்கையில் முதல் அனுபவம்

தபால் கந்தோரில் பணியாற்றும் ரங்கா துமிந்த என்பவர் தனது காற்சட்டையில் வைத்திருந்த கையடக்க தொலைபேசி தீடீரென தீபற்றிக் கொண்டுள்ளது.

இலங்கையில் இதுவரை நிகழ்ந்திராத ஓர் சம்பவமாக இது நோக்கப்படுகிறது. அவரது காற்சட்டைபையினுள்ளே திடீரென தீப்பற்றிக்கொண்டுள்ளது.

உடனே அவர் அக் கைத்தொலைபேசியை காற்சட்டைபையினுள்ளே இருந்து வெளியில் எடுத்து எறியும் தறுவாயில் அவரது கை விரல்களில் தீ காயங்கள் ஏற்பட்டு கொழும்பு பொது மருத்துவமனையின் எரிகாயப்பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது போன்றதொரு சம்பவம் இலங்கையில் இதுதான் முதல் தடவை ஏற்பட்டுள்ளது.

அவரது கைத்தொலைபேசியை ஆய்வு செய்து பார்த்த போது அதன் பட்டரியிலிருந்தே தீப்பிடித்திருக்க வேண்டும் என அறியவந்துள்ளது.



1 comment:

  1. The person should inform country distibuter agency that hand phone,i hope that agency will return him new phone or money.This kind of accidents before also worldwidly happend.

    ReplyDelete

Powered by Blogger.