இரு காதி நீதிபதிகள் அதிரடியாக நீக்கம்
இரண்டு காதி நீதிபதிகளுக்கு எதிராக செய்யப்பட்டிருந்த முறைப்பாடுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவ்விருவரையும் நீதிச்சசேவை ஆணைக்குழு உடனடியாக பதவி நீக்கம் செய்துள்ளது.
அம்பாறை - இறக்காமம் காதி நீதிபதி தனது சொந்த மகனின் தலாக் வழக்கைத் தானே விசாரணைசெய்து தீர்ப்பு வழங்கியது தொடர்பிலும், கரைவாகுப்பற்று வடக்கு கல்முனை காதி நீதிபதிக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் ஆணைக்குழு நடத்திய விசாரணைகளை அடுத்தே இவ்விருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment