Header Ads



நாட்டில் 90 நிமிடங்களுக்கு ஒரு தடவை சிறுவர் துஸ்பிரயோகம் - பெண்கள் அமைப்பு

 
சிறார்கள் மீதான துஸ்பிரயோகங்கள் நிறுத்தப்படுவதற்கு அதிகாரத்திலுள்ளோர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு குற்றம்சுமத்தியுள்ளது.

கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்னாள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது இந்த பெண்கள் தலைவி சமன்மலி குணசிங்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். நாட்டில் 90 நிமிடங்களுக்கு ஒரு சிறுவன், அல்லது சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

குற்றவாளிகளை அரசாங்கம் பாதுகாப்பதால் இவ்வாறான குற்றச் செயல்கள் அதிகரித்துச் செல்வதாக அவர் சுட்டிக்காட்டினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் குற்றவாளிகள் நாட்டுக்குத் தேவையில்லை என்று கோஷமெழுப்பினர்.

No comments

Powered by Blogger.