ஈரான் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை தயாரிக்கிறதாம்..!
சர்வதே எதிர்ப்பையும் மீறி ஈரான் சமீபத்தில் அணு உலையை உருவாக்கியது. இதன் மூலம் அணு குண்டுகளை தயாரிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த பிரச்சினையால் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது ஈரான் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஈரானிடம் தற்போது 23 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இவற்றுடன் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை சேர்ப்பதற்காக அணுசக்தி என்ஜினை உருவாக்க உள்ளனர்.
இதுதொடர்பாக கடற்படை தளபதி அப்பாஸ் சாமினி கூறும்போது, ஈரான் அணுசக்தியை ஆக்கபூர்வ பணிக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். மின் உற்பத்தி, விவசாயம், மருந்து தயாரிப்பு போன்றவற்றுக்கு மட்டும் அணுசக்தி பயன்படுத்தப்படுகிறது.
இதுதவிர அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் என்ஜினை தயாரிக்க உள்ளோம். இது அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். 18 ஆயிரம் 750 டன் எடை கொண்ட கப்பலை இயக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment