Header Ads



யாழ்ப்பாணத்தில் உள்ளுராட்சி தேர்தலை நடத்த முடியுமாக இருந்தால், ஏன் வடமாகாண சபை தேர்தலை நடத்த முடியாது - ஐ.தே.க.

வடமாகாண சபை தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி கோரியுள்ளது. கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைக் கோரியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ளுராட்சி தேர்தலை நடத்த முடியுமாக இருந்தால், ஏன் வடமாகாண சபை தேர்தலை நடத்த முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலில் வடமாகாண சபை தேர்தலை நடத்துவதன் மூலம், மக்களின் ஆணையை பெற்று அதிகாரப் பகிர்வுக்கான அடித்தளத்தை ஏற்படுத்த முடியும். ஆனால் அங்கு மக்களின் ஆதரவு அரசாங்கத்துக்கு கிடைக்காது என்பதால், தேர்தலை நடத்த அரசாங்கம் அஞ்சிகிறது என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான ராஜதந்திர உறவினை நவீனமயப்படுத்த வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சீனாவுக்கான விஜயத்தை மேற்கொணடு அங்கு சென்றுள்ள ரணில் விக்ரமசிங்க, அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.

இறப்பர் – நெல் உடன்படிக்கை மூலம் ஆரம்பமான சீனா - இலங்கை உறவு, நவீன காலத்துக்கு எற்ப அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். சீனா கமியுனிச கட்சியின் அழைப்பின் பேரில் கடந்த 10ம் திகதி அங்கு சென்ற ரணில், எதிர்வரும் 16ம் திகதி வரையில் அங்கு தங்கி இருப்பார்

No comments

Powered by Blogger.