கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் ரவூப் ஹக்கீம்...?
எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதலமைச்சு வேட்பாளராக அமைச்சர் ரவூப் ஹக்கீம் களமிறக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இந்த தீர்மானத்துக்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண உறுப்பினர்களிடையே இருவேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
எவ்வாறாயினும் இவ்வாறானதொரு தீர்மானம் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை போல எதிர்வரும் 16ம் 17ம் திகதிகளில் பொத்துவிலில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளின் போது தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வேறு எந்த கட்சியுடனும் இணையாது, தனித்து தமிழ் மற்றும் முஸ்லிம் வேட்பாளர்களை போட்டியில் நிறுத்தவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

.jpg)
முதல்வர் வேட்பாளர் தெரிவில் கட்சிக்குள் குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்க ஹகீம் அவர்களே முதல்வர் வேட்பாளராக அமர வேண்டும். அரசுடன் கூட்டு சேர்ந்து தேர்தலில் குதிப்பது உகந்ததல்ல. கடந்த காலங்களின் நிகழ்வுகளை அலசிப்பார்த்தால் முஸ்லிம் கட்சிகளை கருவாய்பிள்ளைக்கு ஒத்ததாகவே அரசாங்கம் உபயோகிக்கின்றது. நிச்சயம் பிள்ளையானை பகைத்துக்கொள்ள மகிந்த விரும்ப மாட்டான். மு கா தனித்து நின்றால் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு சீட்டு கிடைக்காது. கட்சி வாரியாக அதிக உறுப்பினர்களை (9) மு கா க்கு கிடைக்கும். ஆகவே இதை வைத்து அரசுடன் அல்லது த.தே கூ வுடன் பேரம் பேசி முதல்வர் பதவியை பெற முடியும்.
ReplyDeleteகிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஓரணியில் திரண்டால் ஒரு பொம்மையைக் கூட அல்லது கற்பனைப் பாத்திரத்தைக்கூட வெல்ல வைக்கலாம்.பதவி மோகம் அல்லது நான் என்ற ஆணவம் வந்து விட்டால் ஜனாதிபதி நினைத்ததுதான் நடக்கும். பிள்ளையான் அல்ல பேதிரிஸ் வந்ததாலும் ஆச்சரியமில்லை. கிழக்கு மாகாண முஸ்லிம்களது "நான் தான் ராஜா" வேடத்தை யாராலும்(அல்லாவைத் தவிர) தடுக்கமுடியாது. றவூப் ஹகீம் பாடும் கண்டி மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவத்தின் நிலையும் 'ஐயோ பாவம்'.கண்டியில் ஒரு பெரும்பான்மை இனத்தவா் பாராளுமன்றம் போவார்.அது மட்டும் நடக்கும்.அந்த உதவியை கிழக்குமாகாண மக்கள் செய்து தந்தால் சமூகத்திற்கு அதுபோதும்.
ReplyDelete