Header Ads



இந்துத்துவ கட்சிகள் வலியுறுத்தியும் அப்துல்கலாம் பின்வாங்கினார்..!

குடியரசுத் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விசயத்தின் அனைத்து சாதக பாதங்களையும் தற்போதைய அரசியல் சூழ்நிலைகளையும் பரிசீலனை செய்து இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மீண்டும் ஒருமுறை குடியரசுத் தலைவராக வேண்டும் என்றோ குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றோ நான் விரும்பவில்லை என்றாலும் மம்தா பானர்ஜி மற்றும் சில அரசியல் கட்சித் தலைவர்கள் நான் போட்டியிட வேண்டும் என்று விரும்பினார்கள்.

இந்த நாட்டின் குடிமக்கள் பலரும் நான் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஆதரவு எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியை அளித்து.

இது அவர்களின் விருப்பம். அவர்களின் விருப்பத்தை நான் மதிக்கிறேன். என் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நான் நன்றி செலுத்த விரும்புகிறேன். தற்போதைய அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று நான் முடிவு செய்துள்ளேன்.

அப்துல்கலாம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று கலாமிடம் 3 முறை தொலைபேசியில் பேசியிருந்தார். மமதா பானர்ஜியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தார். பாஜகவின் குல்கர்னி நேரில் சென்று கலாமை சந்தித்துப் பேசினார். இருப்பினும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருமித்து கலாமை ஆதரிக்காததே அவர் போட்டியிடாமல் இருக்கக் காரணம் என்று கூறப்படுகிறது

1 comment:

  1. எதை எங்கே வைக்கவேன்டுமோ அதை அங்கே வைப்பதுதான் எல்லாருக்கும் நல்லது. இவர் இருப்பதற்கு தகுதியான இடம் SCIENCE LAB இவரப்போய் ஜனாதிபதியாக்கினால் ஒன்னும் நடக்கப்போறதில்லை.ஒரு முறை ஜனாதிபதியாக இருந்ததால் ஒரு பெரிய விஞ்ஞானி அவரிடம் உள்ள அரிவையெல்லம் புரம் தள்ளிவிட்டு விஞ்ஞான உலகமே இவரைப்பார்த்து எல்லி நகையாடக்கூடிய அளவுக்கு, மூட நம்பிக்கையின் மொத்த உருவான ஒரு நிர்வான மனிதனுக்கு கும்பிடு போடும் அலவுக்கு கொன்டு போய் சேர்த்துல்லது

    ReplyDelete

Powered by Blogger.