வியாபாரத்தை நோக்கமாக கொண்டிருந்த முஸ்லிம்கள் இன்று கல்வியில் கரிசனை - பந்துல
ஏ.எஸ்.எம்.இர்ஷாத்
தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கும்போது தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படுமென கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளீர் கல்லூரியின் பழைய மாணவிகளின் ஒன்றுகூடல் நிகழ்வு கல்லூரி அதிபர் ஹஜர்ஜான் மன்சூர் தலைமையில் நடைபெற்றபோது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன மேற்கண்வாறு தெரிவித்தார்.

அவர் உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது,
ஒரு பாடசாலையின் வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலையின் பழைய மாணவர்களின் பூரண ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது. இப்பாடசாலையில் மொழி அறிவுக்கான நூலகமொன்றை அமைத்து அனைத்து மாணவர்களுக்கும் ஏனைய மொழிகளை கற்றுக்கொள்ளும் வழியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். நாட்டிற்குத் தேவையான சகல மொழிகளையும் கற்கும்போது ஏனையவர்களிடம் தங்கியிருக்க வேண்டிய தேவை ஏற்படாது.

முன்னைய காலங்களில் வியாபாரமே முஸ்லிம்கள் நோக்கமாக இருந்தது ஆனால் இன்று அந்த நிலை மாறி அவர்கள் கல்வியில் கரிசனை கொண்டு செயற்படுவதை காண முடிகின்றது என்றார்.அத்துடன் இப்பாடசாலையில் நிலவும் தேவைகளை முடிந்தளவு தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். மாணவிகளின் கலை நிகழ்சிகளும் இடம்பெற்றது.

Post a Comment