Header Ads



யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் எழுச்சி

Mohideen Masjid

Masjid Mohammadiya

ஐந்து சந்தி ஐதுரூஸ்

ஹிஜ்ரி 1433 றஜப் பிறை 11, அதாவது ஜூன் முதலாம் நாள் வெள்ளிக்கிழமையாகிய இன்று யாழ் முஸ்லிம் வட்டாரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வொன்று இடம்பெற்றது, அதாவது 1990களுக்கு முன்னர் இடம்பெற்ற அமைப்பில் ஆனால் ஒரே தலைமைத்துவத்துடன் கூடிய ஜும் ஆத் தொழுகைகள்

மஸ்ஜித் முஹம்மதிய்யா -புதுப்பள்ளிவாயல்

பெரிய மொஹிதீன் பள்ளிவாயல்- மானிப்பாய்வீதி

ஆகிய பள்ளிவாயல்களில் இடம்பெற்றன, இரு பள்ளிவாயல்களிலும் கூடுதல உள்ளூர், வெளியூர் மக்கள் சமூகம் தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2010கள் தொடக்கம் சீரான ஒரு சூழலில் முஸ்லிம்கள் மீளவும் குடியேறி, முஸ்லிம் வட்டாரத்தை மீண்டும் ஹயாத்தாக்கி, இங்கிருக்கும் பள்ளிவாயல்களை உயிர்ப்பித்து முஸ்லிம் சமூக உருவாக்கத்திற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இதனை மேலும் ஒழுங்குபடுத்தும் விதத்தில் எமது பிரதேசத்தின் எல்லாப் பிரிவினைகளையும் கடந்து கூட்டான ஒரு தலைமைத்துவத்தை வழங்கும் நோக்கில் யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதிலே 13 அமைப்புகள், எல்லாப் பள்ளிவாயல் நிர்வாகங்கள், சமூக ஆர்வலர்கள் என பலதரப்பினரும் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள். சம்மேளனமே யாழ் முஸ்லிம் உம்மத்தின் தலைமைத்துவமாக அடையாளப்படுத்தப்படுகின்றது. இந்த சம்மேளனமே யாழ் முஸ்லிம் வட்டாரத்தின் பள்ளிவாயல் நிர்வாகங்களுடன் இணைந்து, ஆலிம்களுடைய ஆலோசனைகளையும் பெற்று ஜும்ஆ போன்ற முக்கிய சமூகத் தீர்மானங்களை மேற்கொள்கின்றது.

இதனடிப்படையில் எமது பிரதேசத்தின் ஜும்ஆ தொழுகை தொடர்பாக “4 ஜும்ஆப் பள்ளிவாயல்களிலும் வாராந்தம் இரு  ஜும்ஆக்களை நடாத்துதல்” என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இலங்கையின் பல முஸ்லிம் கிராமங்களில் ஊர்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளையும் கருத்தில் கொண்டு, இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பினையும் கருத்தில் கொண்டு எமது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் பின்வரும் அடிப்படைகளில் மேற்கொள்ளப்பட்டதாகும்

* ஜும்ஆப் பள்ளிவாயல்களின் செயற்பாடுகளை அதிகரிப்பதனூடாக மீள்குடியேறும் சமூகத்தில் ஒரு விழிப்பு நிலையினை ஏற்படுத்தல்.

 *     முஸ்லிம் பிரதேசத்தில் இஸ்லாமிய செயற்பாடுகள் அடிக்கடி நிகழ வாய்ப்பளிப்பதன் மூலம் இங்கே காணப்படும் மாற்றுமத சமூகங்களிடம் குறித்த பிரதேசம் முஸ்லிம்களுடையது என்ற உணர்வை .

 *     மஸ்ஜித்களில் காணப்படும் இடப்பற்றாக்குறையை சமாளித்து அவற்றில் இபாதத்களை அதிகப்படுத்துதல்.

 *     பலமுள்ள சமூகக் கட்டமைப்பை 4 ஜும்ஆப்பள்ளிகளையும் அண்டியதாக ஏற்படுத்துதல்

போன்றன பிரதான காரணிகளாகும்.

இந்நிலையில்  சம்மேளனத்தின் தீர்மானம் ஊரை இரண்டுபடுத்தும் ஒற்றுமையைக் குலைக்கும் தீர்மானம் அல்ல, மாற்றமக யாழ் முஸ்லிம் வட்டாரத்தின் எழுச்சிக்கான ஏற்பாடாகும். இதனை மறுக்கும் தீர்மானங்கள் சமூகத்தைக் குழப்பும் ஒற்றுமைக்குப் பங்கம் ஏற்படுத்தும் முயற்சியாகும். இவ்வாறான விடயங்களை முன்னிறுத்தி மார்க்கத்தின் பெயரால் சமூகங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் எண்ணம் கொண்ட அனைவரையும் யாழ் முஸ்லிம் சமூகம் புறக்கணிக்கும். தலைமைத்துவம் குறித்த  மார்க்கத்தின் அடிப்படைகளுடன் விளையாடுவதை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்றும் பொதுமக்கள் கருத்துக்களை வெளியிட்டனர்.

பிற்குறிப்பு - யாழ் முஸ்லிம் இணையத்துடன் வியாழக்கிழமை மாலை தொலைபேசி மூலமாக தொடர்புகொண்ட ஒருவர் யாழ்ப்பாணத்தில் 2 ஜும்ஆ குத்பாக்கள் நடைபெறுவதை எதிர்த்தார். இவ்வாறு குத்பாக்களை நடைபெறுவது சமூக ஒற்றுமைக்கு பங்கம் எனவும் குறிப்பிட்டார். 1990 ஆம் ஆண்டு ஒன்றுக்கு மேற்பட்ட ஜும்ஆ குத்பாக்கள் நடைபெற்ற நிலமைக்கும், தற்போதைய நிலைமைக்கும் வித்தியாசம் காணப்படுவதாகவும், தற்போது 2 ஜும்மாக்கள் நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் குறிப்பிட்டார்.

மேற்சொன்ன 2 ஜும்ஆ விடயம் சரியா அல்லது பிழையா என்று தீர்ப்புக்கூற யாழ் முஸ்லிம் இணையம் தயாரில்லை. இருந்தபோதும் இதுவிடயத்தில் சில மாற்றுக் கருத்துக்கள் உள்ளது என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது.



2 comments:

  1. இரு பள்ளிகளில் ஜும்மா நடை பெறுவது நல்ல விடயம்தானே.இதை எதிர்ப்பவர்கள் தூரநோக்கு சிந்தனை அற்றவர்களாக இருக்க வேண்டும்.இரு பள்ளிகளில் நடத்துவதன் மூலம் பள்ளிக்கு அருகில் வசிப்பவர்கள் பிரசங்கம் கேட்டு நல்ல விடயங்களை புரிந்து கொள்வார்கள்.சன நெரிசல்,வாகன நெரிசல் இல்லாமல் தொழுது வருவது எதிர்ப்பவர்களுக்கு
    புரியவில்லையா?
    Meraan

    ReplyDelete
  2. இதில் கருத்து முரண்பட வலுவான மார்க்க ரீதியாக ஏதும் காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
    யாழ்ப்பாணத்தில் பலர் பள்ளிக்கு வெளியில், கடும் சூட்டில் ஜும்மா தொழுகை நிறைவேற்றுவது நடைபெறும் நிலையில்,
    இது நல்ல ஒரு முடிவாகும் என்றே தோன்றுகின்றது.

    இலங்கையின் பல ஊர்களிலும் நிறைய ஜும்மா பள்ளிகள் உள்ளன.
    மாற்றுக் கருத்து கொண்டவர்கள், நியாயமான காரணங்கள் இருந்தால், அவற்றை
    முன்வைப்பது சிறந்தது.

    அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன்.

    ReplyDelete

Powered by Blogger.