பாராளுமன்றம் வேண்டாம், பௌத்த வளர்ச்சிக்குப் பாடுபட்டால் போதும் - அஸ்கிரிய பீட தேரர்
கண்டியிலிருந்து மொஹமட் ஹபீஸ்
பௌத்த துறவிகள் பொதுசேவையை மேற்கொள்ள பாராளுமன்றமோ அல்லது உள்ளுராட்சி மன்றங்களுக்கோ செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கண்டி அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கத் தேரர் உடுகம ஸ்ரீ புத்தரகித தேரர் தெரிவித்தார்.
(12.6.2012 மாலை)கண்டி அஸ்கிரிய விகாரையில் இடம் பெற்ற வைபவம் ஒன்றின் போது அவர் இதனை; தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,
இன்று பொது சேவையைல் ஈடுபட்டுள்ள பலர் தமது உரிமைகளுக்காக பணிப்பகிஷ்கரிப்பு போன்ற போராட்டங்களை நடத்துகின்றனர். இதுபோல் பௌத்த மத குருக்களும் பொது சேவைக்காகச் சென்று பணிப்பகிஷ்கரிப்புக்களில் ஈடுபடத் தேவையுமில்லை. அவர்கள் விகாரைகளில் இருந்து கொண்டு பௌத்த சமய வளர்ச்சிக்குப் பாடுபட்டால் அது மட்டும் போதுமானது என்றார்.
.jpg)
பிக்குகள் நாடாளுமன்றம் போனால் பௌத்தம் வளர்ச்சியடையுமா? அல்லது போகாதுவிட்டால்தான் வளர்ச்சியுறுமா? ஒன்றுமே இல்லை.
ReplyDelete