Header Ads



மஹிந்தவின் தந்திரோபாயம் - கிழக்கு மாகாண முஸ்லிம் முதலமைச்சர் கனவு தகர்ந்ததுபோனது..?



வடமாகாண சபை தேர்தலை நடாத்த முடியாத நிலையிலுள்ள அரசாங்கம், கிழக்கு மாகாண சபை தேர்தல் நடத்தப்படுமிடத்து தொடர்ந்தும் பிள்ளையான்  என அழைக்கப்படும் சந்திரகாந்தனை முதலமைச்சராக வைத்திருக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையிலேயே தற்போது கிழக்கு மாகாண முதலமைச்சராக இருக்கும் பிள்ளையானை மாற்றுவழியின்றி தொடர்ந்தும் முதலமைச்சராக வைத்திருப்பது என்ற நிலைப்பாட்டிற்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் அண்மையில் பிள்ளையானை சந்தித்து பேச்சுக்களை நடத்தியிருந்தார். இதில் முதலமைச்சர் பிள்ளையான் சமரசமடைந்த பின்னரே கிழக்கு மாகாண சபை தேர்தலை அரசாங்கம் முடுக்கிவிட்டிருப்பதாக தெரிகிறது.

மேலும் இலங்கைக்கான இந்தியாவின் தூதுவரும் அண்மையில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு தேர்தல் தொடர்பில் அங்கு நிலவும் நிலைமைகளை நேரில் கண்டுகொண்டதாகவும் கூறப்படுகிறது. எதிர்வரும் அக்டோபர்  மாதம் ஜெனீவாவில் இலங்கை தொடர்பிலான விவாதம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னர் கிழக்கு தேர்தலை நடாத்தி தனது அரசாங்கத்திற்கு தமிழ், முஸ்லிம்களிடத்தில் ஆதரவு உண்டு என்பதை வெளிக்காட்ட மஹிந்த ராஜபக்ஸ முயலுவதாகவும் கூறப்படுகிறது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்தும் போட்டியிட்டாலும், தம்முடன் கூட்டுச்சேர்ந்து போட்டியிட்டாலும் தேர்தலின் பின்னர் தமக்கு ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கை அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் தினக்குரல் பத்திரிகையில் டிட்டோ குகன் என்பவர் எழுதியுள்ள அரசியல் பந்தியில் தெரிவிக்ப்பட்டுள்ளது.

3 comments:

  1. மகிந்தாவின் சாணக்கியம் இதில் ஒன்றுமில்லை.நம்முடைய ஒற்றுமையை?நன்றாக பயன் படுத்திக் கொண்டார்கள்.அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.
    Meraan

    ReplyDelete
  2. பிள்ளயானும் போய்விட்டால் கருணா கேட்பான் அவனுக்கும் இல்லை என்றால் புலிகழிடம் காசு வாங்கிய மனித உரிமை சங்கத்துக்கும் ஐக்கிய நாடுகளின் இன்னெர் சிட்டி ப்ரசுக்கும் நவனீதம்பிள்ளைக்கும் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்ரறியத்துக்கும் எப்படி பதில் சொல்லித்தப்புவது அது போனால் போகட்டும் அமெய்சர்களே யாழ்,மன்னார் முஸ்லீம்களை மீள்குடியேற்ற ஆவண செய்யுங்கள் வகுப்பேற்றம் செய்கிறோம்

    ReplyDelete
  3. இந்ததத் தேர்தலில் அனைத்து முஸ்லிம் கட்சிகளும், தலைவர்களும் ஒன்றிணைந்து ஒரே குடையின் கீழ் நிற்காவிட்டால் மீண்டும் எமது முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும். கடந்த தேர்தலில் எமது முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உதறித் தள்ளி விட்டு தேர்தலில் குதித்தார்கள். ஆனால் அன்று சில அடிவடுரிகளின் கீழ்த்தனமான வேலையால் நாம் ஒரு முஸ்லிம் முதலமைச்சரை இழந்தோம். இதை நினைவில் வைத்து இம்முறை கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் தாயகம் என்பதை நிரூபிக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.