Header Ads



சவூதி அரேபிய சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர்களின் துயரம்

சவுதி அரேபியாவில் மலாஸ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பணியாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். சிறு குற்றங்களுக்காக பெருமளவிலான இலங்கையர்கள் அந்த நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் நியூஸ்பெஸ்ட்டுக்கு குறிப்பிட்டுள்ளனர்.

தாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து இலங்கை தூதரகத்திற்கு  அறிவித்துள்ளபோதிலும் இதுவரை கவனம் செலுத்தப்படவில்லை என்று இலங்கை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் அமல் சேனாதிலங்காரவிடம் தொடர்புக் கொண்டு கேட்டபோது இந்த பணியாளர்களின் பிரச்சினைகள் குறித்து உடனடி கவனம் செலுத்தப்படும் என்று கூறினார்.

சவுதியிலுள்ள இலங்கை தூதரகம் ஊடாக  பணியாளர்கள்  தொடர்பில் அறிக்கை ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. நடக்கும் ஆனா நடக்காது

    ReplyDelete
  2. im living in saudi arabia for past few years, i've been visited srilankan embassy for several reasons for several times. i can say one thing they are not their for support us but for make the problems worse . they five priority for saudies instead srilankan fellows. the embossy in saudi is totaly useless,big head bastards ...

    ReplyDelete

Powered by Blogger.