Header Ads



அழகை சிதைப்பதற்காக மனைவியின் மூக்கை வெட்டிய கணவன்


பாகிஸ்தானில் உள்ள தாத்ரா பாராளுமன்ற மலை பகுதியை சேர்ந்தவர் அலாராக்கி (51). இவருக்கு 13 வயதில் திருமணம் நடந்தது. அப்போது இவர் மிகவும் அழகாக இருப்பார்.

இவர் தனது 19 வயதில் ஒருநாள் கணவரிடம் அனுமதி பெறாமல் வெளியே சென்றார். இதை அறிந்த அவரது கணவர் தேடி சென்றார். அப்போது தனது தோழிகளுடன் ராக்கி வீடு திரும்பி கொண்டிருந்தார். அவரை பார்த்ததும் ஆத்திரம் அடைந்த கணவர் தான் வைத்திருந்த கத்தியால் ராக்கியின் மூக்கை அறுத்தார்.

மேலும், இனி நீ அழகாக இருக்கக்கூடாது என்று கூச்சலிட்டார். மூக்கு அறுபட்டு துண்டானதும் ரத்த வெள்ளத்தில் ராக்கி துடித்தார். இருந்தும் வீட்டிற்கு இழுத்து வந்த கணவர் அவரது காலில் சாட்டையால் அடித்து கொடுமைப்படுத்தினார்.

அழகாக இருப்பதால்தானே என்னை மதிக்காமல் நீ தனியாக வெளியே சென்று வந்தாய். எனவேதான் உனது அழகான மூக்கை அறுத்து முகத்தை அசிங்கப்படுத்தினேன். இனி வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே அடங்கி கிடக்க வேண்டியதுதான் என ஆவேசமாக கத்தினார்.

அதில், இருந்து ராக்கி அவமானத்தால் கூனி குறுகி பெரும்பாலான நேரம் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தார். வெளியில் செல்லும்போது பர்தாவுக்குள் தனது முகத்தை மறைத்து வந்தார். இப்படியே 32 ஆண்டுகள் கழிந்தது.

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ஒரு டாக்டரை சந்தித்தார். அப்போது அவர் ஆபரேசன் மூலம் அவர் இழந்த மூக்கை சீரமைக்கலாம் என ஆலோசனை வழங்கினார். அதை தொடர்ந்து, அவரது விலா எலும்பு பகுதியில் இருந்து தசையை எடுத்து அறுப்பட்ட மூக்கை சீரமைத்தார்.

இதையடுத்து 32 ஆண்டு களுக்கு பிறகு அறுப்பட்ட தனது மூக்கு மீண்டும் கிடைத்ததை கண்ணாடியில் பார்த்த ராக்கி மகிழ்ச்சி அடைந்தார். இதற்கிடையே, அவரது மூக்கை அறுத்த கணவருக்கு கோர்ட்டில் பெரிய தண்டனை எதுவும் வழங்கவில்லை. 10 மாதம் மட்டுமே அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். மேலும் அவரது மூக்கை சீரமைக்க தேவைப்படும் பணத்தை கொடுக்கவும் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதையும் அவர் கொடுக்கவில்லை.

2 comments:

  1. பாகிஸ்தான் நாடோ வறுமையில் தவிக்கறது.மக்களோ படிக்காத பாமரர்கள்,பாகிஸ்தான் அரசாங்கமோ அணு ஆயுதம் உற்பத்தி திவரமாக இருக்கிறது,அணு ஆயுதம் தான் மக்களின் பசி வந்து திர்கபோறது.
    நான் பாகிஸ்தானை முஸ்லிம்கள் என்ற முறையில் மட்டும் தான் மரியதை வேற போனால் ஒன்றும் நல்லது சொல்ல இல்லை.அவர்களின் என்னுடைய எண்ணப்படி கிட்டதட்ட 10 % தான் உண்மையான்ன நல்ல முஸ்லிம்கள்.அவர்களின் பெரும் பாலானோர் நம்பிக்கை இல்லாதவர்கள் கல்வர்கள்.

    ReplyDelete
  2. ஒரு சில முஸ்லீம்களால் இஸ்லாத்திற்கு ஏற்படும் களங்கம்.அமெரிக்காவின் காலடியை நக்கி கொண்டு இருப்பவர்களுக்கு நாட்டு நிலைமை எங்கே தெரியப் போகிறது.மார்க்கம் புரியாத,தெளிவில்லாத மக்கள் தான் உலகம் முழுவதும் மார்க்கத்தை கொண்டு செல்கிறார்கள்.அதனால்தான் இஸ்லாத்திற்கும்,முஸ்லீம்களுக்கும் உலகம் முழுவதும் அவமானங்களும்,கேவலங்களும் தொடர்கிறது.
    Meraan

    ReplyDelete

Powered by Blogger.