Header Ads



யாழ்ப்பாண வைத்தியரின் இல்லம் மீது தாக்குதல்

யாழ்.போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் வைத்திய சிகிச்சை நிபுணர் ஜெயக்குமாரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள்  தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இன்று வியாழன் நள்ளிரவு ஒரு மணியளவில் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் உள்ள அவரது வீட்டில் புகுந்த நபர்கள் வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்தி, விட்டு தேசத்துரோகீகலுக்கு இதுதன் தன்டனை என எழுதி (தமிழ் எழுத்து பிழைகளுடன் ) வீட்டில் வைத்து விட்டு கழிவு ஒயிலையும் ஊற்றிவிட்டு சென்றுள்ளனர்.

தாக்குதல் நடத்த வந்தவர்கள் முகமூடி அணிந்ததிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வீட்டில் உள்ள யன்னல்களை அடித்து நொருக்கி வீட்டை சேதமாக்கியுள்ளனர். வீட்டிலுள்ளோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வேளை இடம்பெற்ற இச் சம்பவத்தைத் தொடர்ந்து அவர்கள் கூக்குரலிட்டுக் கத்தியுள்ளனர்.

அத்துடன் மின் விளக்குகளையும் ஒளிரச் செய்தனர். இதனால் தாக்குதல் நடத்த வந்தவர்கள் தப்பியோடினர்.


No comments

Powered by Blogger.